கண்ணி றைந்த காவ ணங்கள் கனிகள் மிக்க சோலைகள் கண்ட போது பண்டை யெங்கள் நாக ரீகம் காட்டுமே. (தமிழ்)7 மனித வாழ்வில் இன்ப மென்று சொல்லு கின்ற யாவையும் மற்ற வாழ்வில் உதவு மென்று நம்பு கின்ற ஞானமும் தனிமை யான முறையில் யார்க்கும் தந்த திந்தத் தமிழகம் தட்டி டாது தெய்வ மின்னும் கிட்டி நம்மைக் காக்கும். (தமிழ்)8 134,புது வாழ்வு பல்லவி புதுவாழ்வு வரவேணும் வரவேணும் எங்கள் பொதுவாழ்வு பலமுற்றுத் தரவேணும் புகழே! (புது) சரணங்கள் தமிழ்நாட்டின் மனைதோறும் புதுவாழ்வு வந்து தனியான தருமத்தின் சுகமுற்றும் தந்தே அமிழ்தான மொழிபேசி அகிலத்தில் காணும் அனைவோரும் உறவாக அதுசெய்ய வேணும். நமதான இந்நாடு தமதாக வென்றே |