சண்டை யென்றே அஞ்சினும் சரணம் என்று கெஞ்சினும் மண்டை உள்ள மட்டிலும் மரணம் நம்மை விட்டதோ? (உலக)6 ஏழை என்ற போதிலும் என்ன துன்பம் மோதினும் கோழை என்று வாழ்ந்திட்டோம்; கொடிய ருக்குத் தாழ்ந்திட்டோம்; (உலக)7 ஊர்கள் தோறும் கூடுவோம்; ஒற்று மைகொண் டாடுவோம்; சீர்கு லைக்க எண்ணுவோர் சிந்தை நோகப் பண்ணுவோம். (உலக)8 வீதி தோறும் காவலாய் வீடு தோறும் ஏவலாய்ச் சாதி பேதம் தள்ளுவோம்; சமர சத்தைக் கொள்ளுவோம்; (உலக)9 அன்னி யர்க்கி டங்கொ டோம்; அரசை யார்க்கும் இனிவிடோம்; மன்ன ராகி ஆளுவோம். மாநி லத்தில் வாழுவோம். (உலக)10 143. கைத்தொழில் கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்; எத்தொழில் எதுவும் தெரியாமல் இருந்திடல் உனக்கே சரியாமோ? (கை)1 உழவும் தொழிலும் இல்லாமல் உலகில் ஒன்றும் செல்லாது; விழவும் கலையும் விருந்துகளும் வேறுள இன்பமும் இருந்திடுமோ? (கை)2 |