ஆறி அமர்ந்துவிட்டேன் - அருள் ஆண்டவன் சன்னதிமுன் தேறித் தெளிந்த என்னை - எந்தத் தீவினை என்னசெய்யும்? 10 147. ஆண்மை அஞ்சாத நிலையே ஆண்மை அஞ்சினோர்க் கருளல் ஆண்மை கெஞ்சாத வாழ்வே ஆண்மை கெஞ்சினோர்க் கிரங்கல் ஆண்மை மிஞ்சாத கோபம் ஆண்மை மிஞ்சினால் காத்தல் ஆண்மை துஞ்சாத ஊக்கம் ஆண்மை துன்பத்தில் துணையாம் ஆண்மை. 1 பொய்யாத நிலையே ஆண்மை புகுந்தாருக் கபயம் ஆண்மை வையாத பேச்சே ஆண்மை வருந்தாமல் இருத்தல் ஆண்மை எய்யாத சொல்லே ஆண்மை இகழாமல் இடித்தல் ஆண்மை பொய்யாது கொடுத்தல் ஆண்மை கோள்சொல்லாக் குணமே ஆண்மை. 2 உள்ளதை உரைத்தல் ஆண்மை ஒளிப்பதை ஒழித்தல் ஆண்மை கள்ளத்தைக் கடிதல் ஆண்மை கயமையைக் காய்தல் ஆண்மை எள்ளொத்த துன்பம் கூட எவருக்கும் இழைக்கா தாண்மை வெள்ளத்தைப் போன்ற அன்பின் வெற்றியே விரும்பும் ஆண்மை. 3 |