அஞ்சும் மனத்தவரும் - கொஞ்சம் ஆண்மை தருமனப் பான்மை யடைந்திட மஞ்சு விரட்டிடுவோம் - துஷ்ட மாட்டையும் அடக்கும் தாட்டிகம் காட்டுவம் வஞ்சனை மோகங்களும் - தங்கள் வாடிக்கை விட்டந்த வேடிக்கை பார்த்துடன் கொஞ்சி மகிழ்ந்திடும்நாள்! - மைந்தர் கூட்டமும் பந்தய ஓட்டமும் மங்களப் பாட்டும் மிகுந்த பொங்கல்! 4 மங்கள வாழ்வுபெற்று - மக்கள் மாச்ச ரியம்தரும் ஏச்சுக ளைவிட்டு எங்கள் திருநாட்டில் - இனி ஏழ்மையும் யாருக்கும் தாழ்மையும் நீங்கிடச் செங்கை சிரங்கூப்பித் - தெய்வ சிந்தனை யிற்பல வந்தனை பாடிஇப் பொங்கலை வாழ்த்திடுவோம் - இந்தப் பூதலம் யுத்தத்தின் வேதனையாற் படும் தீதறப் பொங்குக பால். 5 குறிப்புரை:- தாட்டிகம் - பலம்; இங்கிதம் - இனிமை; மாசு - குற்றம். 162. சுதந்தரப் பொங்கல் அடிமை விலங்குகள் அகன்றன இனிமேல் கொடுமை பிறர்பால் கூறுதற் கில்லை திடமுடன் சத்தியத் தீயினை வீட்டி மடமை மதவெறி மமதையை எரித்துப் பொய்யும் மோசமும் புலையும் பொசுங்க 5 வையம் முழுவதும் வாழ்ந்திடத் துணிந்திங் கன்பெனும் பாலை அடுப்பகத் தேற்றித் |