புலவர் சிவ. கன்னியப்பன் 233

அன்பின் ஆண்மையும் ஆற்றலும் வளரும்;
       அன்னை பாரதத் தாய்மனம் குளிரும்;
துன்பம் யாவையும் தொலைந்திட முடியும்
       சோற்றுத் தரித்திர மாவது விடியும்.       3

முச்சுடர் ஒளிதரும் நம்கொடி நிழலில்
       முற்றிலும் சத்திய சாந்தநல் வழியில்
மெச்சிடும் நன்மைகள் மிகமிகக் கொடுப்போம்;
       மேதினி எங்கணும் கொடுங்கோல் தடுப்போம்.       4

எல்லா தேசமும் எமக்கினி உறவாம்;
       எவரும் செய்திடும் நன்றியை மறவோம்;
நல்லார் யாரையும் நலமுறக் காப்போம்
       நலிப்பவர் எவரும் நடுங்கிடப் பார்ப்போம்.       5

சுதந்தரம் சுதந்தரம் சுதந்தரம் ஒன்றே
       சுகந்தரும் சுகந்தரும் சுகந்தரும் என்றும்;
பதந்தரும் பலந்தரும்; பரமனைக் காணும்
       பக்தியென் பவருக்கும் சுதந்தரம் வேணும்.       6

173. குடியரசுத் திருநாள்

இந்தியத்தாய் குடியரசுத் திருநாள் இந்நாள்
       இந்நாட்டின் அயலுறவு சிறப்புற் றோங்கி
வந்திடுமோ எனநடுங்கும் அணுகுண் டுப்போர்
       வாராமல் தடுத்துலகை வாழ வைக்கும்
மந்திரமாம் காந்திமகான் மார்க்கம் தன்னை
       மற்றெல்லா நாடுகளும் மதிக்கச் செய்யச்
சொந்தமுள்ள நாம் அதற்குத் தொண்டு செய்யத்
       துணைபுரியத் திருவருளைத் தொழுவோம் வாரீர்.       1

அமிழ்தமெனும் தமிழ்வளர்த்த அறிவிற் கேற்ப
       அன்புமுறை தவறாத ஆற்றல் கூட்டித்
தமிழரெனும் தனிப்பெருமை தாங்கி நின்று
       தனிமுறையில் செயல்புரியத் தலைப்பட் டாலும்