236நாமக்கல் கவிஞர் பாடல்கள்

இன்னுயிர் நீ்க்கும் வினைபுரியா
       திருப்பவ ரேதாம், மிகப்பெரியார்
பொன்னுரை இதன்படி வாழ்ந்தவனாம்
       புண்ணிய மூர்த்திநம் காந்திமகான்
அன்னவன் புகழே பாடிடுவோம்
       அஹிம்சா வழியே நாடிடுவோம்.       4

ஒன்றாய் நல்லது கொல்லாமை
       ஒத்தது பொய்யுரை சொல்லாமை
என்றான் வள்ளுவன் திருக்குறளில்
       எம்மான் காந்திதன் உருக்குறளில்
நின்றான் அம்மொழி நிலைநாட்ட
       நீங்காப் பெரும்புகழ் மலைகாட்டி
நன்றாய் நாமிதை உணர்ந்துவிடின்
       நானிலம் போர்வெறி தணிந்துவிடும்.       5

175. கம்பன் திருநாள்

கம்பன் திருநாள் கொண்டாடிக்
       கவிதா தேவியின் அருள்கூடி
அன்பின் வாழ்க்கையைக் கடைப்பிடிப்போம்
       அனைவரும் இன்புறும் படிநடப்போம்.       1

கற்றவர்க் கெல்லாம் பொதுவாகும்
       கம்பன் திருநாள் இதுவாகும்
மற்றுள பற்பல நாட்டாரும்
       மதித்துளம் மகிழ்ந்திடும் பாட்டாகும்.       2

தமிழ்மொழி தனக்கொரு தவச்சிறப்பைத்
       தந்தது கம்பனின் கவிச்சிறப்பே
‘அமிழ்தம் தமிழ்மொழி‘ என்பதுவும்
       அழியா திருப்பதும் கம்பனதாம்.       3