விளையாடித் தீரும் வேறு வினையிலாக் குழந்தைக் காலம்; வளையாடும் கையார் மையல் வாலிபப் பருவம் எண்ணும் திளைவாடித் தீர்ந்த பின்னும் தீராத சித்தாக் ரந்தம்; களையாமெய்ப் பொருளை சற்றே கருதுவார் ஒருவ ரில்லை. 7 மனைவி என்பது யார்? மற்றும் மக்கள்என் பவர்தாம் யாவர்? வினைதரும் உலகம் முற்றும் விசித்திரம்; சொந்தம், பந்தம் அனையன யாவை? நீதான் யார்? இங்கே எதனின் வந்தாய்? இனியும்நீ எங்கே போவாய்? எண்ணிப்பார் அண்ணே! இன்னே. 8 நல்லவர் தமையே நாடி நல்லவர் உறவே கொள்வாய்; அல்லலை வளர்க்கும் பற்றை அறுத்திட அதுவே மார்க்கம்! மொல்லையாம் பற்று விட்டால் மோகமே தீர்ந்து சித்தம் ஒல்லையில் நிலைத்து வீட்டை உயிருடன் அடைவாய் நெஞ்சே. 9 நீரற்றுப் போன பின்பு நீர்நிலை உருவம் நீங்கும்; வீரற்றுப் போயும் காம விகாரங்கள் விடாத தேனோ! |