ஒருவழி ஒன்றே உங்களுக் குண்டு மருமிகும் இந்த மார்க்கத் திருப்பது சாலவும் தவறெனத் தகுதியி லுணர்ந்தால் வேலையை விட்டு விலங்கிடல் வேண்டும். அன்றேல் இந்த அரசியல் முறைமை 150 நன்றே நானும் நாட்டிற் கிடைஞ்சல் செய்தவ னென்றே தெளிந்திடு வீரேல் நொய்தில் விடாமல் நூலில் இதற்குள தண்டனை முழுவதும் தந்திடல் வேணும் கொண்டஇந் நாட்டின் குறைதவிர்ந் திடவே. 155 181. நாட்டுக் கும்மி கும்மியடி பெண்கள் கும்மியடி யுங்கள் கொத்துச் சரப்பளி சத்தமிட நம்மையெ லாம்பெற்ற இந்திய நாட்டின் நன்மையைக் கோரி யடியுங்கடி! 1 கடவுள் வணக்கம் புத்தனென் றும்மஹ மத்தனென் றும்ஏசு நாதனென் றும்மது சூதனென்றும் நித்த முதித்தருள் நீதி யளித்திடும் நிர்மல ஜோதியைப் போற்றுங்கடி! 2 பிரமன் துதி நீதி நிலைக்க நினைந்தவ னாம் அருள் ஜோதி யுருக்கொண்ட மேனிய னாம் ஆதி யறத்தை அளித்திடு வான்எங்கள் அரவிந்த நாதனைப் போற்றுங்கடி. 3 |