28நாமக்கல் கவிஞர் பாடல்கள்

யாருடை நாடு? யாருடை வீடு?
யாருடைப் பாடு? யார்அனு பவிப்போர்!
பிறந்த நாட்டினிற் பிறவா தவரிடம்
இரந்து நின்(று) அவர் ஏவலே செய்தும்
உடலே பெரிதென உயிரைச் சுமந்திடும்       20

ஊனமில் வாழ்வினை ஒழித்திடத் துணிந்தோம்!
ஞான நாயகா! நல்லருள் காத்தே
ஆண்மையும் அறிவும் அன்பும் ஆற்றலும்
கேண்மையும் பிறர்பால் கேடிலா எண்ணமும்
அடிமை ஒருவருக் கொருவர்என் றில்லாக்       25

குடிமை நீதியின் கோன்முறை கொடுத்துச்
சோறும் துணியும் தேடுவ தொன்றே
கூறும் பிறவியின் கொள்கை யென் றின்றி
அளவிலா உன்றன் அருள்விளை யாட்டின்
களவியல் போன்ற கருணையின் பெருக்கின்       30

உளவினைத் தேடி உணர்ந்திட வென்றே
வளமும் எங்கள் வாழ்நாட் போக்கி
மங்களம் பாடி மகிழ்ந்திடத் தருவாய்
எங்கும் இருக்கும் எழிலுடைச் சோதி!       34

15. ஆன்ம ஜோதி

ஆற்றல்கள் அனைத்தும் நீயே
       அருளுவாய் எனக்கும் ஆற்றல்;
போற்றிடும் வீரி யம்நீ
       எனக்கதைப் புகட்ட வேண்டும்;
மாற்றரும் பலங்கள் நீயே
       மற்றெனைப் பலவா னாக்கு
சாற்றரும் ஜீவ சத்தே
       சத்தினை எனக்குத் தாரார்.       1