புலவர் சிவ. கன்னியப்பன் 297

கருணை வாழ்வின் அருண னான
       காந்தி சீடர் வருகிறார்.
கால் நடந்தே ஊர்கள் தோறும்
       கைகு விக்கப் பெறுகிறார்
தருண மீது தமிழ கத்தின்
       தனிமை யாகும் வண்மையைத்
தாங்கிப் பூமி தானம் ஈந்து
       தர்ம வேள்வி பண்ணுவோம்.       12

வாழ்க வாழ்க காந்தி நாமம்
       என்றும் நின்று வாழ்கவே!
வந்து தித்த நம்வி னோபா
       வாய்மை யாளன் வாழ்கவே!
வாழ்க பூமி தானம் செய்யும்
       வண்மை போற்றும் யாவரும்
வாழ்க சாந்த சத்தியத்தில்
       வந்த நம்சு தந்தரம்.       13

186.தீ்ண்டாமை நீங்க

தீண்டாமை என்கிற தீய வழக்கம்
       தீரத் தொலைந்திட நல்லநா ளாச்சு!
ஆண்டவன் பொதுவென்று நம்பின யாரும்
       அந்தப் பழியை அகற்றிட வாரும்.       1

இந்தவழக்கம் நாளுக்கு நாளாய்
       இந்து மதத்தின் வெட்டுது வாளாய்;
நிந்தை மிகுந்து அழிந்திடு முன்னே
       நீங்கிட யாரும் எழுந்திடும் இன்னே!       2

வேதத்தி லில்லை கீதையில் இல்லை
       வேறுள சாத்திரம் யாருக்கினி.
சாதித்து யாரையும் சண்டாளன் என்றிடும்
       சாத்திரம் சத்தியச் சம்மதமோ?       3