விமல னான கடவுள்சக்தி மனிதன் கிட்டி விலகினால் வேறு ஜீவன் யாவும்அந்த விமலன் என்பது எப்படி? 6
ஞாய மல்ல ஞாயமல்ல ஞாய மல்ல கொஞ்சமும் நாடு கின்ற பேர்களை நாமி டைத்த டுப்பது; பாயு மந்த ஆற்றிலே பருகி வெப்பம் ஆறிடும் பறவை யோடு மிருகமிந்தப் பாரி லார்த டுக்கிறார்? 7 குறிப்புரை:- அமலன் - குற்றமில்லாதவன்; விமலன் - மேலானவன். 188. விட்டது சனியன் விட்டது சனியன் விட்டது சனியன் விட்டது நம்மை விட்டதடா! கொட்டுக முரசு கொம்பெடுத்து ஊது கொடும்பாவி கள்ளைக் கொளுத்தி விட்டோம். (விட்)1 செத்தது கள்பேய் இத்தினம்; இதைஇனி தீபா வளிபோல் கொண்டாடு; பத்திரம் கள்மேல் சித்தம்வா ராவிதம் பார்ப்பதும் காப்பதும் உன்பாரம். (விட்)2 ஈசுவர வருடம் புரட்டா சியிலே இங்கிலீஷ் ஒன்றுபத்து முப்பத்தேழில் சாசுவதம் போலவே நம்மைப்பிடித்து ஆட்டிய சனியன் கள்கடை சாத்திவிட்டார்! (விட்)3 கூலியைத் தொலைப்பதும் தாலியை இழுப்பதும் கூசிட ஏசிடப் பேசுவதும் சாலையில் உருண்டொரு சவமெனக் கிடப்பதும் சந்தி சிரிப்பதும் இனியில்லை! (விட்)4 |