306நாமக்கல் கவிஞர் பாடல்கள்

சேவை செய்யும் நல்லவன்
       செம்மை கண்ட வல்லவன்
தேவை யுள்ள யாரையும்
       தேடிச் சென்று சேருவான்.       (தொண்)3

அன்பி னைப்பெ ருக்குவான்
       ஆசை யைச்சு ருக்குவான்
துன்ப முற்ற எவரொடும்
       துணையி ருக்கத் தவறிடான்.       (தொண்)4

பணிவு மிக்க தொண்டனே
       பரம ஞானம் கண்டவன்
தணிவு மிக்க சொல்லினால்
       தரணி எங்கும் வெல்லுவான்.       (தொண்)5

கூவி டாமல் ஓடுவான்
       குறைகள் தீர்க்க நாடுவான்
ஏவி டாத தொண்டனே
       எதிலும் வெற்றி கொண்டவன்.       (தொண்)6

கடவுள் என்ற சக்தியைக்
       கருதி டாத பித்தரின்
மடமை நீக்கும் சேவைதான்
       மனிதர்க்கு இன்று தேவையாம்.       (தொண்)7

பூமி தான போதகன்
       பூஜி தன்வி நோபாவின்
புதுமை மிக்க தொண்டுதான்
       போற்ற வேண்டும் இன்றுநாம்.       (தொண்)8

193. குடிப்பதைத் தடுப்போம்

குடிப்பதைத் தடுப்பதே
       கோடிகோடி புண்ணியம்
அடிப்பினும் பொறுத்துநாம்
       அன்புகொண்டு வெல்லுவோம்!       (குடி)1