புலவர் சிவ. கன்னியப்பன் 327

தேடிப் புதைத்துவைத்து
       வயிறாரத் தின்னாமல்
வாடிப் பசித்து நொந்து
       வந்தவரை நிந்தைசொல்லி
ஓடி ஒளிந்துகொள்ளும்
       உலுத்தரல்ல நாங்கள் அம்மா!
நாடி ஒருதீம்புவர
       ஞாயம்இல்லை இவ்விடத்தே.       (ஆரா)7

கோவம் மிகுந்தாலும்
       குத்துச்சண்டை வந்தாலும்
பாவம் பழிகளுக்குப்
       பயந்து ஒதுங்கும் எங்களுக்குச்
சீவன் இருக்குமட்டும்
       தேகம் உதவும் அம்மா
தேவி துணையிருப்பாள்
       தெள்ளமுதே! கண்ணுறங்கு.       (ஆரா)8

பள்ளிப் படிப்பறியோம்
       பட்டணத்துப் பேச்சறியோம்
வெள்ளைத் துணியறியோம்
       வீண்பிலுக்குச் செய்தறியோம்.
கள்ளப் பிழைப்பு அறியோம்
       காவேரி சாட்சிஅம்மா.
உள்ளபடி இங்குனக்கே
       ஒருகுறையும் இல்லையம்மா!       (ஆரா)9

205. சுதந்தர மக்களின் சமதர்மம்

வானவெளி ஆராய்ச்சி மிகுந்து மேலும்
       வகைவகையாய் விஞ்ஞானம் வளர்ந்தே அந்தப்
பானுவையே தொட்டுவரும் பாணம் ஏவிப்
       பயணத்தில் முழுவெற்றி பலித்திட் டாலும்