புலவர் சிவ. கன்னியப்பன் 329

206, தமிழ்ப் பண்பைக் காப்போம்!

இசைமலிந்த பலகலையும் உலகுக்கு ஈந்தார்;
       ‘இனிமை‘எனும் தமிழ்மொழியின் உரிமைபூண்டார்;
திசைமொழிகள் எங்கெங்கும் வணங்கி வாழ்த்தும்
       திருக்குறளாம் அறிவளித்த தமிழர் முன்னாள்
பசைமிகுந்த ஊக்கமுடன் கடலும் தாண்டிப்
       பலநாட்டில் நம்பெருமை பரவச் செய்தோம்;
வசைகூறும் கட்சிகளாய்ப் பிரிந்தோம் இன்று
       வறுமையுற்றுப் பெருமைகெட்டு வாழ்தல் காணீர்.       1

அறம்வளர்த்த தமிழ்த்தாயைப் பொதுவாய்க் கொண்டும்
       அன்றிருந்த மூவேந்தர் அவர்கள் கூட
மறம்வளர்த்துச் சண்டையிட்ட மடமை யாலே
       மாற்றார்கள் தமிழ்நாட்டை மடக்கி ஆண்டார்;
உரம்இருந்தும் உறவிருந்தும் தமிழர் தம்முள்
       ஒற்றுமைதான் இல்லாமல் ஒடுங்கிப் போனோம்;
திறந்தெரிந்தோம் ஒன்றுபட்டே இனிமே லேனும்
       தேசநலப் பொதுப்பணிகள் செய்வோம் வாரீர்!       2

அயல்நாட்டை அபகரிக்கும் ஆசைக்கு அல்ல;
       பிறமொழியை அவமதிக்கும் அகந்தைக்கு அல்ல;
இயல்பான உரிமைகளை இழந்தி டாமல்
       இனப்பெருமை நற்குணத்தை இகழ்ந்தி டாமல்
செயலாலும் சொல்லாலும் சிந்தை யாலும்
       செய்யதமிழ்த் திருநாட்டின் நலமே பேணி
உயர்வான தமிழ்ப்பண்பைக் காப்போம் ஆனால்
       உலகநலம் காப்பதற்கும் உதவி யாகும்.       3

207. இடந்தடுமாற்றம்

அறிவுக் கேற்ற அலுவல் கிடைப்பதோ
படிப்புக்(கு) உகந்த காரியம் பார்ப்பதோ
விரும்பிய படிக்குஒரு வேலையில் சேர்வதோ
தகுதியைப் பற்றிய தன்மை யுள்ளதாய்
உத்தியோகம் அடைவதோ ஊதியம் பெறுவதோ       5