மண்டையில் எழுத்துஇது என்று மயங்கினோம் கர்மந் தன்னை மண்டின நோய்கள் க்ஷாமம் மலிந்திட நலிந்தோம் ஐயோ! 6 பிணியிலே பிறந்து நித்தம் பிணியையே அருந்திப் பொல்லாப் பிணியிலே வளர்ந்தும் அந்தப் பிணியினால் சாகக் கண்டும் அணியிலே ஆடை யாலே அலங்கரித் தோமே அன்றி அறிவிலேஆசா ரத்தால் அழகுஎதும் செய்தோம் இல்லை. பணியிலும் பணத்தி லேயும் சுகம்எலாம் இருந்தாற் போலப் பழகினோம் நாமே அன்றிப் பழக்கினோம் மக்கள் தம்மை துணிவுஇலோம் தூய்மை இல்லோம் சுசிகர நடத்தை இல்லோம் துவக்குவோம் இனிமே லேனும் நோய்களைத் துடைக்கும் வாழ்க்கை. 7 209. தமிழ்க் கலை வியப்புற இன்பம் விருப்புற விளைக்கும் காரியத் திறமையே ‘கலை‘ எனப் படுவது; இன்பம் தருகிற எல்லாச் செய்கையும் கலையின் இனமாய்க் கருதத் தக்கதே; இன்பம் என்பதில் இரண்டு விதங்கள்; 5 இயற்கை இன்பமும் செயற்கை இன்பமும் இயற்கை இன்பம் ஈடற்றது எனினும் செயற்கை இன்பமே சிறப்புஎன எண்ணி |