புலவர் சிவ. கன்னியப்பன் 347

பெண்டுஒருத்தி தன்மயக்கில்
       பெற்றஎன்னை யும்இகழ்ந்து
சண்டையிட்டுத் திரிவார் நான்
       தவங்கிடந்த மக்கள்எல்லாம்.       20

214. நாட்டை மறந்தனை மனமே!

நாட்டை மறந்தனை மனமே
       நாளும்இங்(கு) எளியவர் வருந்தும்
பாட்டை நினைந்திலை சிறிதும்
       படித்தனை அதன்பயன் இதுவோ?
பூட்டிய விலங்குடன் புலம்பும்
       பெற்றபொன் னாட்டினைப் போற்றாய்
ஏட்டிற் படித்தனை அறநூல்
       ஏதும்உன் செய்கையில் இல்லை.       1

வேதம்வே தாந்தங்கள் வளர்ந்து
       வேண்டிய வளம்முற்றும் பொருந்திப்
பூதங்கள் விபத்துகள் குறைந்து
       பூமியில் இணையற்ற நாட்டில்
சாதமும் வயற்றிற்கில் லாமல்
       சாகாதும் பிணமெனத் தளர்ந்தோம்
ஏத்தன் காரணம் என்றே
       எண்ணவும் மாட்டனை நெஞ்சே!       2

தன்னுயிர் போற்பிற உயிரைத்
       தாங்கிய பெரியவர் வாழ்ந்து
பொன்னொளி வீசிய நாட்டின்
       புகழ்அறம் நீபிறந்து அழித்தாய்
அன்னியர்க்(கு) உளவுகள் சொல்லி
       அவர்தந்த எச்சிலை அருந்தி
உன்னுடன் பிறந்தவர் வருந்த
       உடல்சுகித் திருந்தனை மனமே!       3