மாந்தருக்கு அறிவு காட்டும் மாபெரும் சோதி யாக தேர்ந்துள நமது நாட்டின் சுதந்தரம் நிலைக்க வேண்டும். 4 பாரினில் ஒருநா டேனும் நம்மிடம் பகைகொள் ளாமல் சீரிய முறையில் ராச நீதியின் செம்மை காத்துப் போரிட நினைப்பார் உண்டேல் புலிகண்ட மான்போல் அஞ்சத் தீரமாய் நமது நாட்டின் சுதந்தரம் திகழ வேண்டும். 5 ஆயுத வெறிகள் மிஞ்சி அழிவுக்கே முனைந்து நிற்கும் தீயன குறிகள் கண்டே உலகெலாம் திகைக்கும் துன்பை நாயகன் காந்தி தந்த நன்னெறி தன்னைக் காட்டும் தாயகம் நமது நாட்டின் சுதந்தரம் தடுக்க வேண்டும். 6 219. சுதந்தரச் சபதம் அன்னியர்கள் நமை ஆண்ட அவதி நீங்கி அரசுரிமை முழுவதையும் அடைந்தோம் நாமே என்னினும்ஏன்? சுதந்தரத்தின் இன்பம் காண எவ்வளவோ மனமாற்றம் இன்னும் வேண்டும்; தன்னலமே பெரிதாகக் கருதி டாமல் பொதுநலமே தன்னலமாய்த் தரிக்க வேண்டும்; பொன்னின்உயர் சுதந்தரத்தைப் பாதுகாக்கப் பொறுப்புணர்ந்து கடமைகளைப் புரிய வேண்டும். 1 |