368நாமக்கல் கவிஞர் பாடல்கள்

ஒருநாட்டில் பலமதங்கள் பலநாட் டாரும்
       ஒன்றாகச் சேர்ந்திருக்கும் உறவே வேண்டும்;
பெருந்தி இதைமனத்தில் பிரதி டாமல்
       பேசிடுவோம் விடுதலையின் பேச்சை எல்லாம்       4

வள்ளுவர் வாழ்க்கைதனை நினைப்பு மூட்டி
       வான்புகழும் திருக்குறளை நடந்து காட்டும்
கள்ளமிலாக் காந்திமுனி காட்டித் தந்த
       கருணையொடு சத்தியத்தின் வீரம் சேர்ந்த
தெள்ளியநல் புதுவழியே உலகுக்கு இன்று
       தேவையென் தெரிந்தவர்கள் செப்பு கின்றார்
தள்ளரிய அப்பெரிய தவத்தைத் தாங்கத்
       தமிழர்கள்நாம் மிகமிகவும் தகுதி ஆவோம்.       5

228. தமிழ்வழி அரசு

தமிழ்மொழி வளர்த்த ஞானம்
       தரணியில் பரவி எங்கும்
தமிழ்வழி அரசு நீதி
       தழைத்திட முடியும் ஆனால்
குமிழ்தர உலகை வாட்டும்
       கொடுமைகள் குறையும், உண்மை,
அமிழ்தினை உண்டால் என்ன
       அனைவரும் சுகித்து வாழ்வோம்.       1

சிலம்பினைக் காட்டிக் கேட்ட
       கண்ணகி சீற்றம் கண்டு
குலம்பழி கொண்ட(து) என்று
       குமுறிய துயரால் நொந்து
நலம்பிழைத்(து) அறத்தைக் கொன்ற
       நாணத்தால் உயிரை விட்ட
தலம்புகழ் மன்னன் காதை
       தமிழுக்கே சொந்த மாகும்.       2

கன்றினை மைந்தன் கொல்லக்
       கதறிய பசுவைப் பார்த்தான்