370நாமக்கல் கவிஞர் பாடல்கள்

குறிப்புரை:-சுகித்து - இன்பமாய், மகிழ்ந்து. ‘கண்ணகி சீற்றங்கண்டு
குலம்பழி கொண்டது‘என்னும் தொடர், சிலப்பதிகாரத்தில்
கண்ணகியின் வரலாற்றை நினைவுகூருகிறது. பாண்டியன்,
‘கெடுக என் ஆயுள்‘ எனத் தலைகுனிந்தான். அறம் பிழைத்தோர்க்கு
அறம் கூற்றாகும் என்பது உண்மை எனத் தெரியவருகிறது;
‘இன்றுனக்கு உற்ற துன்பம் எனக்குறச் செய்வேன்‘ என்னும்
தொடர், பெரியபுராணத்தில் மனுநீதிச் சோழன் வரலாற்றினைக்
குறிப்பிடுகின்றது.நீதி தவறாத மன்னனானவன், ‘மன்னன் உயிர்த்தே
மலர்தலை உலகம்‘ என்னும் கோட்பாட்டினை உடையவன்;
அண்டினர் கதவைத் தட்டில் கரத்தினை அறுப்போம்‘ என்னும்
தொடர், பொற்கைப் பாண்டியன் வரலாற்றை நினைவு கூருகிறது.
கீரந்தை என்னும் புலவனுக்காகத் தன், கையைக் குறைத்துக்
கொண்டான்.பொன் கையாக வளர்ந்தது; ‘அடிமையாய் வாழ
மாட்டேன் அன்னியர்க்கு அஞ்சேன்‘ என்னும் தொடர்,
கட்டபொம்மனின் தீர வீரச் செயலும் கடமை உணர்ச்சியையும்
புலப்படுத்திக் காட்டியுள்ளது; ‘கொலை தவிர் வாய்மை‘ என்னும்
தொடர், வள்ளுவர் திருக்குறில் கூறும் கொல்லாமை, வாய்மை
என்னும் அதிகாரத்தைச் சுட்டிக் காட்டுகிறது.காந்திமகான்
வாய்மையையே குறிக்கோளாகக் கொண்டு அறந்தரும்
வாழ்க்கையை நம்முன்னால் வாழ்ந்து காட்டினார்.அத்தகைய
பெருமைக்கு உரியது நமது தமிழ் நாடு.

229. சாந்தி தரும் கொடி

கற்புடைப் பெண்கட்கு எல்லாம்
       கணவனே தெய்வம் என்பார்;
சொற்பொருள் அறிந்தோர்க்கு எல்லாம்
       சொன்னசொல் தெய்வம் என்பார்;
மற்பெரும் வீரர்க்கு எல்லாம்
       மானமே தெய்வ மாகும்;
நற்பெயர் நாட்டிற்கு ஆக்கம்
       நமக்குஇந்தக் கொடியே தெய்வம்.       1

அன்னிய கொடிகள் எல்லாம்
       அரசியல் ஒன்றே பேசிப்