முந்தியுன் முன்னோர் தந்த அறமெலாம் முடிப்ப தாகும் எந்தஓர் நாட்டிற் கேனும் எதிரியாய் எடுத்த நல்ல சந்ததம் உலகுக்கு எல்லாம் சாந்தியைத் தரவே ஆகும். 6குறிப்புரை:- நம்நாட்டுக் கொடி நீதியையே உணர்த்தி நிற்பதாகும். பச்சை - அன்பை உணர்த்தும்; வெள்ளை - உண்மையை உணர்த்தும்; காவி - துறவினைஉணர்த்தும்; ராட்டை - குடிசைக் கூலியை உணர்த்தும். 230. இளைஞரின் உறுதிப்பாடு ‘எந்தத் தேசம் எந்தக் குண்டை எந்த நாட்டிற் போடுமோ‘ என்று மக்கள் உலகில் எங்கும் எங்கும் இந்த நாளிலே இந்த நாடு பெற்று எடுத்த இளைஞர் யாரும் கூடுவோம்! இன்ப மாக மனிதர் வாழ ஏற்ற மார்க்கம் நாடுவோம்; சொந்த ஞானத் தெளிவு கொண்டு வந்த நம்சு தந்தரம் சுத்த மாக நின்று காத்த சத்தி யத்தைக் காக்கவே தந்து போன இந்த நாட்டின் தந்தை யாகும் காந்தியைத் தாழ்ந்து போற்றி உலக முற்றும் வாழ்ந்தி ருக்கப் பண்ணுவோம். 1 இமயம் தொட்டுக் குமரி மட்டும் இங்கிருக்கும் யாரும் இந்தி யாவின் மக்கள் என்ற சொந்தங் காணச் செய்குவோம். |