378நாமக்கல் கவிஞர் பாடல்கள்

எந்திரப் பேயின் இறுமாப்பு அழிந்து
       ஏழ்மையும் தாழ்மையும் இல்லாது ஒழித்துச்
சந்திர சூரியர் வந்துபோம் வரையிலும்
       தன்னர சாட்சியின் சின்னமாய் நிற்பாய்!       1

பாரத நாட்டின் பகையிலாக் கொடியே!
       பன்னலம் மிகுந்த உன்னுடை நிழலில்
ஊரெலாம் செழித்து உயிரெலாம் களித்து
       யாரொடும் எவரும் அன்பே அறமென
பாரிடைக் கடவுள் படைத்ததன் பொருள்கள்
       பங்கிட மூளும் பகைத்தி றம்குன்றி
நேரிய வாழ்வில் நியாயம் நிலவிடும்
       நீதிசேர் அரசின் சோதியாய் நிற்பாய்!       2

ஆருயிர் நாட்டின் அரசியற் கொடியே!
       ஐம்புலன் வென்று செம்பொருள்கண்ட
வீரிய ஞான வித்தகர் தங்கி
       வேதம் வளர்த்த இமய மலையின்
ஊரிய மனிதன் உளம்மிக மகிழ
       உன்னதச் சிகரத் துச்சியில் நின்று
பாருள யாரும் பணிந்திடு மாறு
       பற்பல ஊழி பறந்திடு வாயே!       3

குறிப்புரை:-இலங்குவாய் - விளங்குவாய், திகழ்வாய்; சத்தியம் -
உண்மை, வாய்மை;இறுமாப்பு - கர்வம், செருக்கு; பார் -
உலகம், ஐம்புலன் - மெய், வாய், கண், மூக்கு, செவி
ஆகியவற்றால் உணரும் உணர்வு.

235. கொடி வணக்கம்

கொடிவ ணக்கமது செய்வோம் - நாட்டின்
       குறைகள் நீங்கியினி உய்வோம்
முடிவ ணங்கியதைப் பற்றி - அதன்
       மூன்று நிறக்குறிகள் சாற்றி       (கொடி)1