புலவர் சிவ. கன்னியப்பன் 387

கள்ளினை ஒழித்தவர் கடனறி காந்தி
கதருடை தந்தவர் கணக்கறி காந்தி
வெள்ளையர் தாமே விருப்புடன் ஆட்சி
விட்டிடச் செய்தது காந்தியின் விநயம்.       4

அன்பினைஅறிந்தவன் அருள்தரும் காந்தி
துன்பினை மறந்திடத் துணைதரும் எவர்க்கும்
இன்பினை அல்ல(து)எண்ணாப் பெரியோன்
செம்பொருள் உரைத்தவர் யாரினும் சிறந்தோன்.       5

சோர்ந்துழல்ஏழைகள் சுகம்பெற வேண்டின்
சோம்பிடும் செல்வம் சூதுகள் நீங்க
மாந்தருக் குள்ளே மதவெறி போகக்
காந்தியை மறந்தால் கதிநமக்கு ஏது?       6

குறிப்புரை:- ஆழியான் - சூரியன்; சூது - வஞ்சனை;
கதி - நிலைமை.

243. அன்பின் உருவம்

அன்பின் உருவம் காந்திமகான்
       அருளின் சிகரம் மாந்தருக்கு
தென்பின் நிலையம் திருவுள்ளம்
       தெளிவாம் அறிவின் பெருவெள்ளம்
துன்பம் நேர்ந்திட வருமாகில்
       துயரம் தீர்ந்திடத் திருநாமம்
முன்புஇவ் வுலகம் கண்டறியா
       முற்றிலும் அதிசயத் தொண்டர்பிரான்       (அன்)1

இந்தியநாட்டின் அருள்ஞானம்
       இதுவெனக் காட்டிய பெருமானாம்
தந்தையும் தாயாம் தனித்தலைவன்
       தாரணி நலமுற சனித்த இவன்