புலவர் சிவ. கன்னியப்பன் 391

தூக்கமும் கலைந்தது ஏக்கமும் கலைந்தது
       துன்பக் கனவும் தொலைந்ததடா!
வாழ்க்கையும் திருந்திட நோக்கமும் விரிந்தது
       வள்ளல்அக் காந்தியின் நினைப்பாலே!       5

வஞ்சனை நடுங்கிடும் வெஞ்சினம் அடங்கிடும்
       வாய்மையன் காந்தியின் தூய்மை சொன்னால்
அஞ்சின மனிதரும் கெஞ்சுதல் இனியிலை
       ஆண்மையும் அன்பும் அருளுமடா!       6

ஜீவர்கள் உலகுள யாவரும் சமமெனச்
       செய்கையில் காட்டிய காந்தியடா!
பாவமும் பழிகளும் தீவினை வழிகளும்
       பதுங்கும டாகண்டுள் ஒடுங்குமடா!       7

எழுபதும் ஐந்தும் குழகுழ வயசினில்
       என்னே காந்தியின் இளமையடா!
முழுவதும் அதிசயப் பழுதறு வாழ்க்கையின்
       முத்தன டாபெரும் சித்தனடா!       8

காந்தியின் தவக்கனல் சூழ்ந்ததுஇவ் வுலகினைக்
       காம தகனம்போல் எரிக்குதுபார்!
தீய்ந்தன சூதுகள் ஓய்ந்தன வாதுகள்
       திக்குத் திசையெலாம் திகைத்திடவே!       9

ஏழைகள் எளியவரின் தோழன்அக் காந்தியை
       எப்படிப் புகழினும் போதாதே!
வாழிய அவன்பெயர் ஊழியின் காலமும்
       வையகம் முழுவதும் வாழ்ந்திடவே       10

குறிப்புரை:-தாட்டிகம் - பலம்; அகந்தை; சூது - வஞ்சனை;
வாது - வழக்கு.

246. வையகம் வாழ்த்தும் காந்தி

டிமையின் அச்சம் போக்கி
       அச்சத்தை அடிமை யாக்கிக்