புலவர் சிவ. கன்னியப்பன் 393

அன்பினைத் தகழி யாக்கி
       அறிவினை நெய்யாய் வார்த்து
வன்புலக் காம மாதி
       வர்க்கத்தைத் திரியாய் வைத்துச்
செம்பொருள் காணும் தூய்மைச்
       செழுங்கனல் பற்றச் செய்தே
இன்பருள் கருணை சோதி
       ஏந்திடும் காந்தி நாமம்.       5

வஞ்சமும் பகையும் போகும்
       வையகம் முழுதும் ஓங்கிப்
பஞ்சமும் பசியும் நோயும்
       படுத்திடும் கொடுமை நீங்கத்
தஞ்சமொன் றுண்டோ காந்தி
       தந்துள வழியை விட்டால்?
அஞ்சலி செய்வோம் காந்தி
       அண்ணலின் அருளைப் போற்றி.       6

காந்தியை மறந்து விட்டால்
       கதிநமக் கில்லை கண்டீர்
சாந்தியை இழப்போம் மக்கள்
       சமரச வாழ்வு குன்றும்;
சேர்ந்திடும் தீமை யாவும்;
       திரும்பவும் அடிமை வாழ்வு
சேர்ந்திடல் ஆரும் உண்மை
       நித்தமும் நினைக்க வேண்டும்.       7

குறிப்புரை:-தஞ்சம் - அடைக்கலம்; கனல் - நெருப்பு

247. அற்புதன் காந்தி

ஜயஜய காந்தியின் திருப்புகழ் பாடி;
       தெய்வம் தொழுவோம் அனைவரும் கூடி
பயனுற காந்தியின் புதுநெறி பயின்று
       பாரத நாட்டினர் பலம்பெற வேண்டும்.       (ஜெய)