‘சாந்தம்‘ என்று அதுதான்இன்று சபர்மதிச் சாலைநீங்கி ஏந்திய கொள்கைக் காக ஏரவாடா சிறையில்தங்கிப் பாந்தவர் தாழ்ந்த வர்க்காய்ப் பட்டினி இருப்பேன்என்றே ஆய்ந்தவர் அறிவில் என்றும் காந்தியாய் அரசுகொள்ளும். 14சத்தியம்வெல்லும் என்றால் தவம்அது பலிக்கும் ஆனால் உத்தமன் கடவுள் என்ற ஒருபொருள் உண்மை யானால் இத்துறை எங்கள் காந்தி இடர்உறா வண்ணம் காத்து வைத்திட வேண்டும் இந்த வையகம் வாழ்த்தும் என்றும். 15 குறி்ப்புரை:- முக்குணம் -சாத்வீகம், ராசசம், தாமசம். அவற்றுள் முதற்குணமாகிய சாத்வீகம்சாதுக்குஉகந்தவை. 251. தவமே தவம் கதைகளில் கேட்டது உண்டு கடவுளின் கருணை தன்னைக் கவிதையில் படித்தது உண்டு கருணையின் பெருமை தன்னை வதைபெற உடலை வாட்டி வரும்பல துன்பம் தாங்கி வையகம் துயரம் தீர வைப்பது தவந்தான் என்றும் விதம்விதம் பாடி னாலும் விளங்கினது இல்லை முன்னே |