412நாமக்கல் கவிஞர் பாடல்கள்

கலைமறந்த குடிசைகளைக்
காக்கவந்த கைத்தொழிலே!
அலைமறந்த குணக்கடலே!
காந்தியரே! அஞ்சலித்தோம்!12

மரணம்எனும் பெரும்பயத்தை
மாற்றிவிட்ட மந்திரமே!
திரணமென மதித்துயிரை
ஈடுவைக்கும் பெரும்தீரா!
தருணமதில் வந்துதவி
வெற்றிதரும் தைரியமே!
கரணமெலாம் உன்வசமாய்க்
கைகுவித்தோம் காத்தருள்வாய்!13

ஏழைகளின்பெருந்துணையே!
எளியவரின் நல்லுணர்வே!
மேழியரின் மெய்க்காப்பே!
மெலிந்தவரின்புகலிடமே!
ஊழியரின் ஊழியனாய்
உலகைவென்ற ஒப்புரவே!
வாழியநின் திருநாமம்
வையம்எங்கும்வாழ்வுதரும். 14

254.காந்திவழி வாழ வேண்டும்

கல்லாலும்செம்பாலும் கடவு ளாக்கிக்
கற்பூரம் காட்டிவிட்டால்போதும் என்றே
எல்லாரும் நினைத்துவிடச் செய்து நித்தம்
தெய்வத்தை ஏமாற்றிவாழ்ந்தோம் என்று
சொல்லாலும் செயலாலும் எண்ணத் தாலும்
சுத்தமுள்ள பக்திநெறிசொல்லித் தந்து
கல்லாத எளியவர்க்கும் கடவுள் தன்மை
கண்ணாரக் காட்டும்எங்கள்காந்தி வாழ்க்கை.1

எந்திரங்கள்பெருகிமட்டும் என்ன நன்மை?
ஏராளச் சரக்குகளைக்குவித்தும் என்ன?