பகைவருக்கும்நன்மை செய்யப் பரிவு கற்றுக் கொண்ட நாம் மிகவும் நல்ல நண்ப ரோடும் பகைமை கொள்ள மிஞ்சினோம். (எச்)9அணுவை யும்பி ளந்து அழிக்கும் ஆயு தங்கள் வந்தபின் முணுமு ணுத்துக் கனவிற் கூட மூர்க்கப் பேச்சு செல்லுமோ? (எச்)10 இந்த நாட்டின் ஞான மார்க்கம் என்ற ஒன்றை விட்டுநாம் எந்தக் குண்டைக் கொண்டு மற்ற எவரை வெல்லப் போகிறோம்? (எச்)11 குறிப்புரை:- ஞானமார்க்கம் - அறிவுவழி;நித்தம் - நாள்தோறும். 264. காந்திவழி கொல்லா(து) இருப்பது ஒன்றேதான் கூறும் அகிம்சை என்றல்ல எல்லாச் செயலிலும் நன்னோக்கம் இணைந்த(து) அகிம்சை தன்னாக்கம் பொல்லா தவர்க்கும் தீங்குஎண்ணாப் புனிதம் அதனுடைப் பாங்குஎன்ன சொல்லாற் சொன்னதைச் செய்தவனாம் சொல்லரும் காந்திநம் மெய்த்தவனே. 1 புண்உண்டாக்கிப் போகாமல் புரைதரும் எழுத்தால் ஏசாமல் பண்ணும் காரியம் அனைத்திலுமே பழுதற அருள்நெறி நினைந்தவனாம். அண்ணல் காந்தியின் புகழேதான் அகிம்சை என்பதன் அகராதி |