442நாமக்கல் கவிஞர் பாடல்கள்

;குத்துஈட்டிஒருபுறத்தில் குத்த வேண்டும்
       கோடாரி ஒருபுறத்தைப் பிளக்க வேண்டும்
ரத்தம்வரத் தடியால் ரணமுண் டாக்கி
       நாற்புறமும் பலர்உதைத்து நலியத்திட்ட
அத்தனையும் நான்பொறுத்தே அகிம்சை காத்தும்
       அனைவரையும் அதைப்போல நடக்கச்சொல்லி
ஒத்துமுகம் மலர்ந்(து) உதட்டில் சிரிப்பினோடும்
       உயிர்துறந்தால் அதுவேஎன் உயர்ந்தஆசை;       5

என்றுரைத்தகாந்தியைநாம் எண்ணிப் பார்த்தால்
       எலும்புஎல்லாம் நெக்குநெக்காய்இளகும் அன்றோ?
நின்றுரைக்கும் சரித்திரங்கள் கதைகள் தம்மில்
       நினைப்பதற்கும் இச்சொல்லை நிகர்வதுண்டோ?
கன்றினுக்குத் தாய்போல உயிர்கட் காகக்
       கரைந்துருகும் காந்தியைநாம் நேரில்கண்டோம்
இன்றுலகில் துயர்நீக்கச் சிறந்த மார்க்கம்
       எடுத்துரைக்கக் கொடுத்துவைத்தோம்இருந்து கேட்க. 6

கவிராசர் கற்பனைக்கும்எட்டாத தீரம்
       கடல்என்றால் குறைவாகும் கருணைவெள்ளம்
புவிராசர் தலைவணங்கும் புனித வாழ்க்கை
       பொறுமைஎனும் பெருமைக்குப் போற்றும்தெய்வம்
தவராச யோகியர்கள் தேடும் சாந்தி
       தளர்வாகும் எழுபதுடன் ஒன்பது ஆண்டில்
யுவராச வாலிபர்க்கும் இல்ல ஊக்கம்
       ஒப்புஅரிய காந்தியரால் உலகம்வாழ்க!       7

271. சங்கநாதம்கேட்குது

சாந்த காந்தி சத்தி யத்தின்
       சங்க நாதம் கேட்குது!
ஆய்ந்து பார்க்கத் தேவை யில்லை
       அதிலிருக்கும் நன்மையை