புலவர் சிவ. கன்னியப்பன் 447

அடங்கிடுந் தேகந் தன்னில்
அவித்தையில்அழுந்தும் ஆன்மா
அன்பின்நல் லுருவமாய
அறிஞரைக்கண்ட போது
முடங்கிய மயக்கம் நீங்கி
முன்னையஉணர்ச்சி ஓங்க
மொய்சுடர்க்கொழுந்து போல
முடுகிடும்மேலே அன்றோ?1

அருமறையும் பலகலையும் உலகுக்(கு) ஈந்தும்
அறுசமயப்பலவழியை அடக்கி யாண்ட
உரிமையுடன் பிறநாட்டார்உவந்து போற்ற
ஊழிதொறும்புதிதாகும் உயர்வு தாங்கும்
பெருமைநமைப் பெற்றெடுத்த இந்த நாடு
பெற்றதுஎனநாமடைந்த பெரியபேறு
மருவகற்றிஅருள்சுரக்கும் ஞானந் தோன்றி
மனத்துறவுபூண்டவர்கள் மகிமையேயாம்.2

274. உலகம் வாழ்த்தும் வெள்ளிவிழா

அமரரும் அறிந்தி டாத
அன்பையேஅறமாய்க் கொண்டு
அருள்எனும் பொருளைநாடும்
       அறிவையேநிறையப் பேசிச்
சமரசம் உணரும் சாந்த
              சத்திய நெறியே காட்டிச்
       சச்சர(வு) இல்லா இன்பச்
              சமுதாயம் வளரச் செய்யும்
தமிழ்மொழிப் பண்பைக் காக்கும்
              தன்மையாற் சிறப்புற்(று) ஓங்கித்
       தக்கவர் புகழும் ‘ஈழ
              கேசரி‘ தனைநாம் மெச்சி