இன்னும் துயர்வரினும் - உன்றன் இனமுறை மாறாதே! சின்னத் தனங்களிலே - என்றும் சிக்கிக்கொள் ளாதேநீ. 12இம்சை புரிந்தவர்கள் - அந்த இம்சையி னால்அழிவார்! வம்ச குணம்உனதாம் - சாந்த வாய்மை மறவாதே. 13 சண்டைகள் விட்டுஒழியும் - பல சச்சர வும்போகும்! அண்டி உனைவணங்கிப் - பலர் அமைதி அறிந்திடுவார். 14 அந்தக் குரல் அறிந்தேன்; - அதுவே அன்னையின் பொன்பொழிதான்! சிந்தை தெளிந்துவிட்டேன் - தெய்வ சிந்தனை செய்திருப்பேன். 15 279. சண்டமாருதம் சண்ட மாருதம் வருகுதடா! சமரச உணர்ச்சிகள் பெருகுதடா! கண்டு மாநிலம் கலங்கிடினும் கற்றவர் உள்ளம் துலங்கிடுமே. 1 பேரைக் கேட்டால் பயமாகும்! பெறுகிற நன்மைகள் நயமாகும்! ஊரைக் கேட்டால் தெரியாது! உள்ளம் சொல்லும் சரியாக. 2 காற்றோடு மழையும் இடியிடிக்கும்! கடும்போர் நடந்திடும் வெடிவெடிக்கும்! மாற்றிடும் உலகின் வாழ்வுகளை! மறைத்திடும் ஏற்றத் தாழ்வுகளை. 3 |