;பிறந்தவர் சாவது உண்மை பெற்றபொன் நாட்டிற் காக அறந்தரும் சிந்தை யோடே அன்புசேர் பணிகள் ஆற்றி இறந்தவர் அன்றோ என்றும் இருப்பவர் ஆவார்ed; என்று சிறந்திடும் தேச பக்தி முறைகளே சிந்தை செய்வான். 19 மாதவன் அவன்பே ராகும் மாபெரும் செல்வர் மைந்தன் ஓதரும் கல்வி கற்ற உயர்தரப் பட்டம் பெற்றோன்; தீதரும் அறிவிற் காகத் தேசயாத் திரையும் செய்தோன் ஏதோரு குறையும் இன்றி இருபத்து ஏழாண்டு உள்ளோன். 20 பணத்தின்மேல் ஆசை வைத்துப் படிப்பையும் எண்ணிப் பார்த்துக் குணத்தையும் கொஞ்சம் போற்றிக் குலத்தையே கருதி டாமல் மணத்தினால் அவனைத் தங்கள் மருமகன் ஆங்கிக் கொள்ளக் கணக்கிலாத் தந்தை தாயர் காத்திருந் தார்கள் கண்டீர். 21 284. காவேரித் தெய்வம் ஆடிப் பதினெட்டுப் பண்டிகைக் காவேரி ஆற்றினைப் பூசித்துப் போற்றிடுவோம்; கூடிப் பணிந்து குலதெய்வம் காத்திடக் கும்பிடு வோம்இனித் துன்பம்இல்லை. 1 |