மங்களம் மங்களம் மங்களம்காங்கிரஸ் மாபெரும் புகழ் வாழி இங்குள யாவரும் எல்லா மனிதரும் இன்புற வாழியவே! 10 301, உண்ணாவிரதம் உணர்த்தியஉண்மை (8.2.33இல் காந்தியடிகள் தீ்ண்டாமை ஒழிப்புக்காக உண்ணாவிரதம் மேற்கொண்டதை அறிந்து பாடியது) ‘காடுமலைக் குகைகளிலே திரிந்து வாழ்ந்து கடுகளவும் தேகசுகம் கருதி டாமல் தேடுஅரிய மெய்ஞ்ஞானக் கருணை வாழ்வின் தெளிவடைந்த மகரிஷிகள் தெரிந்து சொன்ன ஈடுஅறியா இந்துமதப் பெருமை தன்னை ஈடழித்தார் தீண்டாமை புகுத்தி! என்று ஊடல்வரத் தவங்கிடக்கத் துணிந்த காந்தி உண்மையினை மேற்கொண்டார் உலகோர் அஞ்ச 1 காற்று, மழை வெயில்இவற்றின் கடுமை காணார் கல்லணையும் புல்லணையும் கனிவாய்க் கொண்டு சோற்றுருசி அறியாத தூய மோனத் துறவிகளும் முனிவரரும் வாழ்ந்து சொன்ன ஏற்றமிகும் இந்துமதப் பெருமை யெல்லாம் இழித்துவிட்டோம் தீண்டாமை வழக்கால் என்று சாற்றுஅரிய பெருங்குணத்தார் எங்கள் காந்தி தவங்கிடக்க உண்ணாமை தாம்மேற் கொண்டார். 2 ஊனமிகும் உடல்சுகத்தை உதறித் தள்ளி உலகநடைச் சுழல்களிலே உழன்றி டாமல் மோனமிகும் ‘சாந்தி‘ நெறி முறையில் நின்ற முனிவர்களின் அனுபவமே முடிவாய்க் கண்ட ஞானமிகும் இந்துமதம் இந்த நாளில் நகைப்புக்கே இடமாகி நலிந்த(து) என்று |