புலவர் சிவ. கன்னியப்பன் 57

ஏனைய நாட்டின் எல்லா அறிவும்
தமிழில் உண்டெனத் தருக்கும் படியாய்ச்
செய்து வைப்பதே தமிழ் மொழிச் சேவை.

குறிப்புரை:- எண்ணில - அளவற்ற: தருக்கு - ஆணவம்:
பாஷைகள் - மொழிகள்.

30. கவிதை என்றால் என்ன?

அசதியைக் கிள்ளி, அறிவைக் கிளப்பி,
அலையும் மனத்தை அடக்கி, நிறுத்தி,
இன்ப துன்ப உணர்ச்சிகள் எழுப்பி,
நன்மை தீமையை நன்றாய் விளக்க
இல்லாத ஒன்றையும் இருப்பதைப் போலவே       5

மனக்கண் முன்னால் மலரச் செய்தே
இருக்கிற ஒன்றையும் இல்லாத தேபோல்
மனத்தை விட்டு மறையச் செய்து,
வாழ்க்கைக் குதவும் நல்ல வழிகளில்
ஊக்கம் கொல்லும் உறுதியை ஊட்டப்       10

பாடுபடாமல் பாடம் பண்ணவும்
நினைவில் எளிதாய் நிற்கவும் தக்கதாய்
இணைத்த சொற்களே ‘கவிதை‘ எனப்படும்.
‘கவிதை‘ என்பது கற்பனை உள்ளது;
கூட்டியும் பேசும்; குறைத்தும் கூறும்;       15

பொய்மையும் வாய்மையே போலப் பொலிவுற
அறங்களைப் புகட்டலே அதனுடை நோக்கம்.
எதுகை மோனை இலக்கணம் பார்த்தும்
பதங்களை அடுக்கிப் பாட்டெனச் செய்தும்
உள்ளதை உள்ளதே போல உரைக்கும்       20

கதையோ பாட்டோ கற்பனை யில்லையேல்
ஐந்தும் மூன்றும் ஆறு என்கிற
கணக்கே யாகும்; கவிதை யாகாது.