ஏட்டுப் படிப்பைமட்டும் கற்றோமே! ஏழைக் கிரங்குமன்பை பெற்றோமா? நாட்டில் நலிந்தவர்க்காய் அழுதுருகும் ராமகிருஷ்ணர் தம் கருணை தொழுதிடுவோம்! 5 சோறும் துணியும்மட்டும் தேடினோமே! துன்பம் குறைக்குமருள் கூடினோமா? கூறும் ராமகிருஷ்ணர் கதைபடிப்போம் கூடும் கவலைகளின் முனைஒடிப்போம். 6 வீடும் மனையும்மட்டும் கட்டினோமே! விமலன் அருளைக்கொஞ்சம் கிட்டினோமா? பாரும் ராம கிருஷ்ணர் சரித்திரத்தைப் படித்து ஜெயித்திடுவோம் தரித்திரத்தை! 7 மக்கள் மனைவிபொருள் நல்லதேதான் மற்றும் பெரியசுகம் இல்லையோதான்? மிக்க பெரியஇன்பம் கொண்டபெரியார் மேலோர் ராமகிருஷ்ணர் கண்டுதெரிவோம். 8 உடலுக் கணிகள்பல பூண்டோமே! உயிருக் கழகுசெய்ய வேண்டாமோ? கடனுக் கமுதுசெய்யும் பூசனையெல்லாம் கட்டாது ராமகிருஷ்ணர் பேசினதுகேள். 9 குறிப்புரை:-சுகம் - நலம் (8); கட்டாது - அருள் - கருணை (7); நலிந்தவர் -வறுமையுற்றவர் (5); ஏகம் - ஒன்று (1). 40. நற்றவசி ரமணரிஷி சித்தர்களும் முத்தர்களும் செரிந்து வாழ்ந்து சேர்த்துவைத்த தவப்பயனின் சிறப்பே யாகும் எத்திசையும் இவ்வுலகில் எங்கும் காணா எழில்மிகுந்த தமிழ்நாட்டின் அமைதி என்றும் |