மன்பெரிய சபைதனிலும் மறவா னாகி மலைபோல நிலையாகக் பாடு பட்டான் என்சொலுவோம் கோகலே பெருமை தன்னை இறந்தாலும் இறவாதான் இவனே யாவான். 3 தருமமும் கரும மெல்லாம் தனித்தனி மறந்து மிக்க தரித்திரம் பிணிக ளெல்லாம் தங்கியே இங்கு நிற்கப் பெருநிலக் கிழவி யிந்தப் பேதையாம் இந்து தேசம் பலபல துன்ப முற்றுப் பஞ்சையாய் வாடி நிற்க வெறுமனே யிருந்து நாங்கள் வீணரா யலைந்து கெட்டோம் வேண்டினோம் தேச பக்தி விமலனார் எமக்குத் தந்த பெருமானே! கோக லேநீ பின்னையும் பிறந்து வந்து பெற்றதாய் இந்து மாதின் பிணியெலாம் அறுத்து வைப்பாய். 4 குறிப்புரை:- பிணி - நோய்: தரித்திரம் - வறுமை. 46. வ.வே.சு. ஐயர் தமிழ்மொழியின் பெருமைதன்னை உலகறிய எடுத்துறைந்த தனிப்பறையின் பேரோசை தணிந்த தேயோ! துமியுரைத்த கவியரசன் சுவைவிளக்கக் கம்பனுக்காய்த் தூதுவந்த பாதமவை துவண்ட வேயோ! அமிழ்ந்துறங்கும் தமிழர்களை அடிமைஇருள் அகன்றதென அழைத்தெழுப்பும் கோழிகுரல் அடைத்த தேயோ? |