ஏழை எளியவர்கள் யாவர்க்கும் இன்பம் கொடுக்கஅவன் பாவிருக்கும். 2 உழுது தொழில்புரியும் பாட்டாளி உழைப்பில் ஓய்வுதரும் பாட்டாகும்; தொழுதே அடிமைப்படும் துயரமெல்லாம் தூரத் தள்ளமனம் உய்குமடா! 3 படித்துப் பழகாத பாமரருக்கும் பாடிப் பருகஅதில் சேம மிருக்கும்; ஒடித்துப் பொருள்பிரிக்கும் சந்திகளில்லை; ஊன்றிப் பதம்கூட்டும் பந்தனமல்ல. 4 காடும் மலையும்அதில் கலைபேசும்; கடலும் ஞானமதிர அலைவீசும்; பாடும் தேசிகவி நாயகத்தின் பழமை பாடிடஎன் நாஉவக்கும். 5 நோய்நொடி யாவையும் விட்டோடி நூறு வயதும்சுகக் கட்டோடு தாய்மொழி வளர்த்தவன் கலிகாணும் தனிவரம் தெய்வம் தரவேணும். 6 49. வ.உ. சிதம்பரம் பிள்ளை சிதம்பரம் பிள்ளையென்று பெயர்சொன்னால் - அங்கே சுதந்தர தீரம்நிற்கும் கண்முன்னால்; விதம்பல கோடிதுன்பம் அடைந்திடினும் - நாட்டின் விடுதலைக் கேயுழைக்கத் திடந்தருமே. (சிதம்) அடிமை விலங்கையெல்லாம் அறுத்தெறியும் - நல்ல ஆற்றல் கொடுக்கும்அவன் சரித்திரமே; கொடுமை பலசகிக்கும் குணம்வருமே - நாம் கோரும் சுதந்தரத்தை மணந்திடுவோம். (சிதம்) |