அவைகளின் பொருளுக்கேற்ற இராகமும் தாளமும் மிக அருமையாக அமைக்கப்பட்டிருக்கின்றன. அவ்வமைப்பின்படி ஒருவன் பாடுவானானால் அதைக் கேட்கும் ஒருவன் மெய் மறந்து ஆனந்தப்படாமலும் நெக்குருகி கண்ணீர் விடாமலும் இருக்கமாட்டான். இப்பூர்வ முறை தாளத்தோடும் சுரத்தின் எழுத்துக்களோடும் அமைந்திருப்பதினால் அம்முறைப்படி பாடுவது கஷ்டமென்று அனேகர் விட்டு விட்டார்கள். நடக்கத் தெரியாத ஒரு சிறு குழந்தை எழுந்து நிற்பதினால் தன் சரீரத்தின் கனத்தைத் தாங்கிக்கொள்ள கொஞ்சம் விரைவாய்க் காலெடுத்து வைத்து சில தூரம் போய்விழுகிறதை நாம் பார்க்கிறோம். இதுபோலவே பூர்வ காலத்துச் சங்கீதமும் தற்காலத்தவருக்கு வெறுப்பைத் தந்தது. சவுக்கமாய் இராகங்களின் அமைப்புத் தோன்ற தாளம் கெடாமல் பாடப்படும் பண்களும் பதங்களும் மிகச் சிறந்தனவென்று நாளது வரையும் சிறந்த வித்துவான்களும் கொண்டாடுகிறார்கள். அப்படிக் கொண்டாடப்படும் பண்களிலும் பதங்களிலும் சிலவற்றைப் பழகியும் கேட்டவர்களுக்கு மனதுருகப் பாடியும் வருகிறார்கள். இப்பண் முறைகள் பாடுவதற்கு மிகச் சிரமமாயிருப்பதினிமித்தம் துரிதகாலத்தில் பாடக்கூடிய தற்கால கானமுறைப்படி பண்கள் ஓதும் முறையை மாற்றியுமிருக்கிறார்கள். சில பண்களுக்கு இங்கிலீஷ் வர்ணமெட்டும் பார்சி வர்ணமெட்டும் போட்டு அவற்றின் அர்த்த பாகத்தையும் அமைப்பையும் மாற்றியிருக்கிறார்கள். 9. தேவார திருவாசகங்களில் காணப்படும் தமிழ்ப் பண்களின் பெயர்களும் அவைகளுக்குத் தற்காலம் வழங்கும் இராகங்களின் பெயர்களும். தேவாரம், திருவாசகம், திருமுறை முதலியவற்றிலுள்ள பண்கள் நாலாம் நூற்றாண்டு முதல் 10-ம் நூற்றாண்டு வரையுமிருந்த பெரியோர்களால் எழுதப்பட்டு நாளது வரை வழங்கி வருகின்றனவென்றாலும் அவற்றிற்கு முன்னும் பூர்வம் தென்மதுரையில் முதற்சங்க காலமுதற் கொண்டு உள்ள பெரியோர்களால் பக்திரசமான பாடல்கள் அப்போதைக்கப்போது பாடப்பட்டு அவைகள் தேவாரத்திரட்டு என்ற பெயருடன் வழங்கி வந்ததாகவும் தெரிகிறது. தமிழிற் சிறந்த வித்துவான்கள் இராஜ சமுகம் செல்லும் பொழுதும் தெய்வ சமுகம் செல்லும் பொழுதும் பாமாலை செய்து பாடுவது பூர்வந் தொட்டு வழக்கம். தெய்வத்தின் திருச் செயல்களை வெறும் வசனங்களாகச் சொல்வதைப் பார்க்கிலும் இன்னிசையுடன் பாடுவதே மனதிற்கு மிகுந்த ஆறுதலையும் ஆனந்தத்தையும் தரும். உள்ளமுருகச் சொல்லும் பண்கள் கன் மனதைக் கரைத்துக் கடவுளிடத்தில் ஒருமைப் படும்படி செய்யும். பூர்வ பண்களின் அழகையும் அவற்றின் பொருளையும் அறிந்து கொள்ளவும் அநுபோகத்திற்குக் கொண்டுவரவும் இயலாத மற்றவர் தங்களுக்கு இலேசான வர்ணமெட்டுக்களைப் போட்டுப் படிக்கவும் நாம் கேட்கிறோம். இது வெகு சமீபகாலத்தில் உண்டானதென்று நாம் அறிவோம். சங்கீத சாஸ்திரத்தில் மிகப்பாண்டித்திய முடையவரென்றும் சிறந்த பக்த சீலரென்றும் யாவராலும் கொண்டாடப்படும் மகா-?-?-ஸ்ரீ மகாவைத்திய நாதையர் அவர்களையும், அவர்களுடைய மூத்தசகோதரரும் தமிழில் பெரிய புராண கீர்த்தனைகள் செய்தவருமாகிய மகா-?-?-ஸ்ரீ இராமசாமிஐயர் அவர்களையும் நம்மில் அநேகர் பார்த்தும் அவர்கள் பாடல்களைக்கேட்டு மிருப்போம். இவர்கள் திருநெல்வேலியில் கல்லிடக்குறிச்சியில் மடாதிபதியாயிருந்த ஸ்ரீசுப்பிரமணிய
|