பக்கம் எண் :

907
தேவார திருவாசகங்களில் காணப்படும் தமிழ்ப் பண்களும் அவற்றிற்குத் தற்காலம் வழங்கும் பெயர்களும்.

பக்கம் ஸ்தலம் பூர்வீகப் பண் தற்கால இராகம்தாளம் பதிக முதல் நினைப்பு
207திருக்கழுக்குன்றம்பண் குறிஞ்சிசங்கராபரணம்திஸ்ரமதோடுடையானொரு காதில்
207திருஅச்சிறுபாக்கம்பண் குறிஞ்சிநோட்டுகண்டசாபுபொன்றிரண்டன்னபுரிசடை
208திருஅரைசிலிபண்பியந்தைக்காந்தாரமசௌராஷ்டிரம்திரிபுடைபாடல் வண்டறை
209திருவேணுபுரம்பண்நட்டபாடைபித்தாபிறைசூடிபோலவண்டார் குழலரிவையொடு
210ஸ்ரீகாழிபண்நட்டராகம்நோட்டுரூபகம்நம்பொருணமக்களென்று
221நல்லூர்திருப்பெருமணம்பண் அந்தாளிக்குறிஞ்சிபைரவிஆதிகல்லூர்ப்பெருமணம்வேண்டாகழுமலம்

இதில் ஒரு பண்ணுக்குத் தற்காலத்தில் வழங்கும் பல இராகங்களின் பெயர் சொல்லப்படுவதாகக் காண்போம். அது போலவே பல பண்களுக்குத் தற்காலத்தில் வழங்கும் ஒரே இராகம் சொல்லப்படுகிறதாகவும் அட்டவணையால் தெளிவாகத் தெரிகிறது. இது திருமுறைகண்ட புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறபடி நட்டபாடை, எட்டுக்கட்டளை, தக்கராகம் ஏழுகட்டளை, சாதாரி ஒன்பது கட்டளை, வியாழக்குறிஞ்சி ஆறு கட்டளை, தக்கேசி ஆறு கட்டளை etc etc என்று 37 பண்களுக்குக் கட்டளைகள் பிரித்துச் சொல்லப்படுவதை 620-ம் பக்கத்தில் பார்த்திருக்கிறோம். இம்முறைப்படி இராகங்கள் பேதப்பட்டுச் சொல்லுகிறதற்கு இடமிருக்கிறது. அதோடு பிற்காலத்தவர் அழகாயிருக்கிறதென்று பூர்வ பண்களை மாற்றித் தற்காலப் பெயர்களோடு வழங்கிய நூதனமான சில மெட்டுக்களை வழங்கிவருவதினாலும் பேதப்பட்டிருக்குமென்று எண்ண இடமிருக்கிறது. இவ்விஷயமாக பூர்வ பண்களின் முறையைக் கூடியவரை ஆராய்ச்சி செய்து தனியாக வெளியிட நினைத்திருக்கின்றேன். இருந்தாலும் பண்கள் ஓதும் முறையில் திறமையுள்ளவர்களுக்கு இதுபோதுமென்று நினைக்கிறேன்.