10. தென்னிந்திய சங்கீதத்தில் வழங்கிவரும் சுரங்களுக்கும் சம அளவுள்ள (Equal temperament) முறையாய் வழங்கும் மேற்றிசையார் சுரங்களுக்கு முள்ள சில ஒற்றுமைகள். அடியில் வரும் அட்டவணையில் ஒரு ஸ்தாயியிலுள்ள ஆயப்பாலையின் பன்னிரண்டு சுரஙகளும் எப்படி மேற்றிசை வாத்தியங்களில் அமைக்கப்பட்டிருக்கின்றன வென்பதைத் தெளிவாய் அறியலாம். 
இதில் ஆறு கறுப்புக் கட்டைகள் படத்தின் மேல் பாகத்திலும் ரி க ம த நி ரி என்ற எழுத்துக்களோடும் 1, 3, 6, 8, 10, 1 என்ற இலக்கங்களோடும் வருகிறதைக் காண்போம். அதின் கீழ் ச ரி க ம ப த நி ச என்ற எழுத்துக்களோடும் C D E F G A B C என்ற இங்கிலீஷ் எழுத்துக்களோடும் 12, 2, 4, 5, 7, 9, 11, 12 என்ற சுரஸ்தானங்களின் இலக்கத்தோடும் எட்டு வெள்ளைக்கட்டைகள் இருக்கிறதையும் காண்போம். ச முதல் ச வரையுமுள்ள ஒரு ஸ்தாயியில் வரும் ஏழு சுரங்களையுமுடையதாயிருக்கிறது.
|