செம்பகை ஆர்ப்பு அதிர்வு கூடமென்று நான்கினும் செம்பகை தாழ்ந்த விசை=இன்பமின்றி இசைத்தல். ஆர்ப்பு மாத்திரையிறந்த சுருதி=ஓங்கவிசைத்தல். அதிர்வு நரம்பைச் சிதறவுந்தல். கூடம் இசை நிறவாதது=தன் பகையாகிய ஆறாநரம்பினிசையிற் குன்றித் தன்னோசை மழுங்கலெனக்கொள்க. இதனை "இன்னிசை வழிய தன்றி யிசைத்தல்செம் பகைய தாகுஞ் சொன்னமாத் திரையி னோங்க விசைத்திடுஞ் சுருதி யார்ப்பே மன்னிய விசைவ ராது மழுங்குதல் கூட மாகு நன்னுதால் சிதற வுந்த லதிர்வென நாட்டினாரே." என்பதனாற்கொள்க. இது பஞ்ச பாரதீயம். அன்றி "செம்பகை யென்பது பண்ணோ டுளரா வின்பமி லோசை யென்மனார் புலவர்." "ஆர்ப்பெனப் படுவ தளவிறந் திசைக்கும்." "அதிர்வெனப் படுவ திழுமென லின்றிச் சிதறி யுரைக்குந ருச்சரிப் பிசையே." "கூட மென்பது குறியுற விளம்பின் வாய்வதின் வராது மழுங்கியிசைப் பதுவே." எனக்கூறினாருமுளர். இவை நான்கும் மரக்குற்றத்தாற் பிறக்கும்; என்னை? "நீரிலே நிற்ற லழுகுதல் வேத னிலமயக்.குப் பாரிலே நிற்ற லிடிவீழத் னோய்மரப் பாற்படல்கோ ணேரிலே செம்பகை யார்ப்பொடு கூட மதிர்வுநிற்றல் சேரினேர் பண்க ணிறமயக் குப்படுஞ் சிற்றிடையே." என்றார். இ-ள். இச்சொல்லப்பட்ட பகை நரம்பு நான்கும் புகாமல் நீக்கும் விரகைக்கடைப் பிடித்தறிந்தென்க. சிலப்பதிகாரம் வேனிற்காதை பக்கம் 202. | 31-32 | "பிழையா மரபி னீரேழ் கோவையை யுழைமுதற் கைக்கிளை யிறுவாய்க் கட்டி." |
(இ-ள்) மயங்கா மரபினையுடையஇப்பதினாற்கோவையாகியசகோடயாழைஉழைகுரலாகக் கைக்கிளை தாரமாகக் கட்டியென்க. இக்குரன் முதலேழினும் முற்றோன்றியது தாரம் "தாரத்துட் டோன்று முழையுழை யுட்டோன்று மோருங் குரல் குரலி னுட்டோன்றிச்-சேருமிளி யுட்டோன்றுந் துத்தத்துட் டோன்றும் விளரியுட் கைக்கிளை தோன்றும் பிறப்பு" என்பதினால் தாரத்தில் முதற்பிறப்பதாகிய உழை குரலாய்க்கைக்கிளை தாரமாகிய கோடிப்பாலை முதற்பிறக்கக் கட்டியென்க. சிலப்பதிகாரம் வேனிற்காதை பக்கம்202. | 33-34 | "இணைகிளை பகைநட் பென்றின் நான்கி னிசைபுணர் குறிநிலை யெய்த நோக்கி" |
இணை கிளை பகை நட்பென்று சொல்லப்பட்ட நான்கினும் இணை-இரண்டு நரம்பு; என்னை?
|