"இணையெனப் படுவ கீழு மேலு மணையத் தோன்று மளவின வென்ப" கிளை-ஐந்து நரம்பு; என்னை? "கிளையெனப் படுவ கிளக்குங் காலைக் குரலே யிளியே துத்தம் விளரி கைக்கிளை யெனவைந் தாகு மென்ப" பகை ஆறும் மூன்றும்; "நின்ற நரம்பிற் காறு மூன்றுஞ் சென்றுபெற நிற்பது கூட மாகும்" கூடமெனினும் பகையெனினு மொக்கும். நட்பு நாலா நரம்பு. இ-ள். இந்நான்கனுள் இகைபுணருங் குறி நிலையைப் பொருந்த நோக்கியென்க. சிலப்பதிகாரம் வேனிற்காதை பக்கம் 202. | 35 | "குரல்வா யிளிவாய்க் கேட்டனள்" |
இ-ள். குரல்முதலாக எடுத்து இனிகுரலாக வாசித்தானென்க. இனி வட்டப்பாலை இடைமுறைதிரிபு கூறுகின்றார். "குன்றாக் குரற்பாதி தாரத்தி லொன்று நடுவ ணிணைகிளை யாக்கிக்-கொடியிடையாய் தாரத்தி லொன்று விளரிமே லேறடவந் நேரத் ததுகுரலா நின்று" என்-எனின், உழைகுரலாகிய கோடிப்பலை நிற்க இடமுறை தியுமிடத்துக் குரல் குரலாயது செம்பாலை; இதனிலே; குரலிற்பாதியும் தாரத்திலொன்றும் இரண்டின் அந்தரத்திலே கிளையாக்கித், தாரத்திலேநின்ற ஓரலகை விளரியின் மேலேறட விளரி குரலாய்ப் படுமலைப்பாலையாம். இம்முறையே, துத்தம் குரலாயது செவ்வழிப்பாலையாம். இளி குரலாயது அரும்பாலையாம். கைக்கிளை குரலாயது மேற்செம்பாலையாம். தாரம் குரலாயது விளரிப்பாலையாம். என அந்தரமைந்து நீக்கி உறழ்ந்து கண்டுகொள்க. இவ்விடத்தில் தாரநரம்பின் அந்தரக்கோலைத் தாரமென்றது. "தன்னமுந் தாரமுந் தன்வழிப்படர" என்னுஞ் சூத்திர விதியானெக். இவ்வேழு பெரும்பாலையினையும் முதலடுத்து நூற்றுமூன்று பண்ணும் பிறக்கும். அவற்றுள் செம்பாலையுட் பிறக்கும் பண்கள் பாலையாழ், நாகராகம், ஆகரி, தோடி, கௌடி, காந்தாரம், செந்துருத்தி, உதயகிரி யெனவிவை. பிறவும் விரிப்பின் உரை பெருகுமாதலின் அவற்றை வந்த வழிக்கண்டு கொள்க. "நாற்பெரும் பண்ணுஞ் சாதி நான்கும் பாற்படு திறனும் பண்ணெனப் படுமே" என்றார். சிலப்பதிகாரம் வேனிற்காதை பக்கம் 203. | 36 | அன்றியும். வரன்முறை மருங்கி னைந்தினு மேழினும் |
(இ-ள்) அங்ஙனம் இளிகுரலாக வாசித்தலேயன்றி முற்கூறியவகையே ஐந்து நரம்பான முறைமையின் ஏழு நரம்பு வாசித்தாளென்றவாறு.
|