சிலப்பதிகாரம் ேவனிற்காதை பக்கம் 203. | 37-41 | உழைமுத லாகவு முழையீ றாகவுங் குரன்முத லாகவுங் குரலீ றாகவு மகநிலை மருதமும் புறநிலை மருதமு மருகியன் மருதமும் பெருகியன் மருதமு நால்வகைச் சாதியு நலம்பெற நோக்கி |
இனி உழை குரன்முதல் குரலிறாயுள்ள நான்கிற்கும் அகநிலை மருத முதற்பெருகியன் மருதும் ஈறாயுள்ள நான்கும் நிரனிரை. (இ-ள்) முன்வணிந்த முறையே உழை குரலாய கோடிப்பாலை அகநிலை மருதமாகவும், உழைகுரலாய்க் கைக்கிளை குரலாய மேற்செம்பாலை புறநிலை மருதமாகவும், குரல் குரலாய செம்பாலை அருகியன் மருதமாகவும், குரல் தாரமாய்த் தாரங்குரலாய விளரிப்பாலை பெருகியன் மருதமாகவும் இச்சொல்லப்பட்ட சாதிப்பெரு பண்ணையும் ஓசையினிமை பெற நோக்கியென்றவாறு. சிலப்பதிகாரம் வேனிற்காதை பக்கம் 203. | 42 | மூவகை யியக்கி முறையுளிக் கழிப்பி |
இ-ள் வலிவும் மெலிவும் சமனு மென்னும் மூவகைப்பட்ட சுருதியும் நிற்கு நிலைமையிலே நிறுத்தி முறையானே அத்தொழிலைக் கழித்தென்க. சிலப்பதிகாரம் வேனிற்காதை பக்கம் 203. | 43-44 | திறந்து வழிப்படூஉந் தென்றிசைக் கரணத்துப் புறத்தொரு பாணியிற் பூங்கொடி மயங்கி |
இ-ள் திறங்கட்குப் பிறப்பிடமாயுள்ள இச்சாதிப் பெரும் பண்களுட் புறநிலை மருதப்பண்ணை வாசித்தலிலே மயங்கியென்க. பூர்வ காலத்தில் தென்மதுரை நாடு மிகுந்த செழிப்புடையதாகவும் செல்வமுடையதாகவும் சிறந்த கலைகளையுடையதாகவும் தெய்வ பக்தியுடையதாகவுமிருந்ததாகப் பல முகமாய் நாம் காண்கிறோம். அதற்கேற்றவிதமாய்த் தமிழ் மக்கள் சங்கீதம், சோதிடம், வைத்தியம், யோகம் முதலிய அருங்கலைகளில் மிகத் தேர்ச்சிபெற்றிருந்தார்கள். தற்காலத்தில் யாழ் வாசிக்கும் ஒருவர் பழகியுள்ள கமகங்களைப் போல் பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல் போன்ற எண்வகை யாழ் ஒலிகளை எழுப்பியு வார்தல், வடித்தல், உந்தல், உறழ்தல் போன்ற எட்டு வகை இசைக் கரணங்கள் செய்து யாழ் வாசித்து வந்தார்களென்றும் தெரிகிறது. இக்கரணங்கள் இன்னதென்றும் எண் வகையான யாழ் இசை இன்னதென்றும் இதன் பின் வரும் அகவல்களாலும் அவற்றின் உரைகளாலும் காண்போம். சிலப்பதிகாரம் கானல்வரி பக்கம் 177. சித்திரப் படத்துட் புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பெய்திப் பத்தருங் கோடு மாணியு நரம்புமென் றித்திறத்துக் குற்றநீங்கிய யாழ்கையிற் றெழுதுவாங்கிப் பண்ணல் பரிவட்டணை யாராய்த றைவரல் கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ் நண்ணிய குறும்போக் கென்று நாட்டிய வெண்வகையா லிசையெழீஇப் பண்வகையாற் பரிவுதீர்ந்து
|