மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தண் மெல்விரல்லகள் பயிர்வண்டின் கிளைபோலப் பன்னரம்பின் மிசைப்படர வார்தல் வடித்த லுந்த லுறழ்தல் சீருட னுருட்ட றெருட்ட லள்ள லேருடைப் பட்டடையென விசையோர் வகுத்த வெட்டு வகையி னிசைக்கர ணத்துப் பட்ட வகைதன் செவியினோர்த் தேவலன்பின் பணியாதெனக் கோவலன் கையாழ் நீட்ட லவனுங் காவிரியை நோக்கினவுங் கடற்கானல் வரிப்பாணியு மாதவிதன் மனமகிழ வாசித்த றொடங்குமன். சித்திரப்படம் உறை. கோட்டில் மலர் புனைந்து-கோட்டுறுப்பில் மலர் மாலையை அணிந்து; வீழ்மணி வண்டு பாய்ந்து மிதித்திடக் கிழிந்த மாலை சூழ்மணிக் கோட்டு வீணை என்றால் சிந்தாமணியிலும்; [காந்-236] மணமகளிர்-கலியாண மகளிர். பத்தர் கோடு ஆணி நரம்பு என்பத யாழுறுப்புக்கள். கோடே பத்த ராணி நரம்பே மாடக மெனவரும் வகையின தாகும் என்பதனாலறிக. தொழுது-யாழ், மாதங்கி யென்னும் தெய்வமிருத்தற் கிடமென்று நூல்கள் கூறுமாதலின் அதனைத் தொழுது. வாங்கி-வயந்த மாலை கையினின்றும் வாங்கி. பண்ணல் முதலிய எட்டும் கலைத் தொழிலென்று சொல்லப்படும். அவற்றுள், பண்ணல்-பாட நினைத்த பண்ணுக்கு இணை, கிளை, பகை, நட்பான நரம்புகள் பெயருந் தன்மை மாத்திரையறிந்து வீக்குதல்; பரிவட்டணை-அவ்வீக்கின நரம்பை அகவிரலாலும் புறவிரலாலும் கரணஞ்செய்து தடவிப் பார்த்தல்; ஆராய்தல்-ஆரோகண அவரோகண வகையால் இசையைத் தெரிதல்; தைவரல்-அநுசுருதி யேற்றுதல்; செலவு-ஆளத்தியிலே நிரம்பப் பாடுதல்; விளையாட்டு-பாட நினைத்த வண்ணத்திற் சந்தத்தை விடுதல்; கையூழ்-வண்ணத்திற் செய்த பாடலெல்லாம் இன்பமாகப் பாடுதல்; குறும்போக்கு-குடகச் செலவும் துள்ளற் செலவும் பாடுதல். இவற்றைச் சீவக சிந்தாமணி காந்தருவதத்தை யாரிலம் பகம், 165-ம் கவியுரையிற் காண்க. இன்னும் விரித்துக் கூறுவர் அரும்பதவுரை யாசிரியர். இசை எழீஇ-சுரங்களை யெழுப்பி. பண் வகையால் பரிவு தீர்ந்து-பண் கூற்றிற் குற்றந் தீர்ந்து; உருபு மயக்கம்; பரிவு-குற்றம். மரகத மணித்தாள்-மரகதமணி மோதிரம்; "மரகதத்தாள் செறி" என்றார் கடலாடு காதையிலும்; [97] பயிர் வண்டு-பாடுகின்ற வண்டு; பயிர்-ஒலி வார்தல்-சுட்டு விரலாற் றொழில் செய்தல்; வடித்தல்-சுட்டு விரலும் பெருவிரலுங்கூட்டி நரம்பை அகமும் புறமுமாராய்தல்; உந்தல்-நரம்புகளைத்தெறிந்து வலிவிற்பட்டதும்மெலிவிற்பட்டதும்நிரல்பட்டதுமறிதல்; உறழ்தல்-ஒன்றிடையிட்டும் இரண்டிடையிட்டும் நரம்புகளைத்தெறித்தல்;
|