கானத்திற்கு சுரங்கள் கண்டு பிடிக்கும் படியாகவும் அதில் சந்தேகப் படும்படியாகவும் நேரிட்டிருக்கிறது.இதில் ச-ப 2/3, ச-ம 3/4 ஆக சுரங்கள் கண்டு பிடிக்கும் குழப்பமும் ஒருஸ்தாயியில் 22 சுருதிகள் வரவேண்டு மென்ற கலக்கமும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அறிவாளிகள் இதன் உண்மையை அறிவார்கள். அறியாதவர் குதர்க்கமிடுவார்கள். என்றாலும் பூர்வ தமிழ் மக்கள் தங்கள் கானத்தில் நுட்பமான சுருதிகளையும் பாடிவந்தார் களென்றும், அதற்கேற்ற விதமாகத் தாளத்திலும் மிகத் தேர்ந்திருந்தார்களென்றும் குழல், யாழ், வாய்ப்பாடல், தண்ணுமை, ஆமந்திரிகை, மற்றும் பாட்டுக்கருவிகள் யாவையும் ஒன்று சேர்த்து ஒன்று மிகுதி படாமலும் மற்றொன்று குறைவு படாமலும் அவ்வவற்றிற்குரிய அளவுகள் தோன்ற முறைமையில் பாடி சபையை அலங்கரித்து வந்தார்களென்றும் பல விதத்திலும் நாம் பார்க்கிறோம். அம்முறைப்படியே சங்கீதத்தில் விருத்தியாக வேண்டிய காலமும் வந்திருப்பதினால் நுட்பமான சுருதிகளின்படி கானம் செய்ய வேண்டியதைக் குறித்துக் காட்ட வேண்டியதுஅவசியமாயிற்று. மேற்குறித்த ஸ்டாப் நொட்டேஷன்படி ஒவ்வொரு கீர்த்தனையையும் பூர்ணமாகச் செய்வதற்கும் போதுமானஎழுத்துக்களில்லாமையால் சுருக்கமாகக் காட்டினோம்.
|