மகா மகிமை தங்கிய பாண்டிய ராஜ பரம்பரை இது காறும் ஒழுங்குற வெளிப்பட்டதில்லை. காரணம் யாதெனின், அதற்கு வேண்டும் சாஸநாதிகள் கிடைத்திலாமையேயாம். இப்பொழுது ஏதோ கிடைத்துள்ள சில சிலை செம்புகளிலுள்ள சாஸனங்களைக் கொண்டு சிற்றறிவுக்கெட்டியவரை ஆராய்ந்து ஒருவாறு வெளியிடப்பட்டது.] பாண்டிய ராஜ வம்சாவளி வேள்விக்குடிச் செப்பேடு 10-வது | பாண்டியாதி ராஜ பரமேஸ்வர பல் சாலை முதுகுடுமிப் பெருவழுதி. இவனே பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவன். இவனைப் பற்றிய வரலாறு வெகு சுருக்கமாகவே புறநானூற்றில் கூறப்பட்டிருக்கிறது. | களபரர் இவனைப் பற்றி விசேஷமாய் ஒன்றும் தெரியவில்லை. இவனுக் கப்பாலுஞ் சில தலைமுறைகளுள் அவைகளும் இன்னும் வெளிப்படவில்லை. | பாண்டியாதி ராஜக்கடுங்கோள் இவனைப் பற்றிய விசேஷங்களுந் தெரியவில்லை. | செழியன் சேந்தன் | மாறவன்மன் அரிகேசரி அசமச்மன். இவன் வில்வேலி சைனியத்தை நெல்வேலி வென்றவன். | கோச்சடையன் ரணதீரன் இவன் மகா பராக்கிரமசாலி; மருதூரில் போர் புரிந்தவன். மங்கள புரத்து மஹாரதரை ஜெயித்தவன். கொங்கர் கோமான். | அரிகேசரி பராங்குச-மாறவர்மன். இவன் பெயரோடு தேர்மாறன், என்றோர் ஒட்டுப்பாடு முளது. இவன் குழுப்பூர், சங்கரமங்கை என்னுமிடங்களில் பல்லவர்களை செயித்தான். இவனையே முதலாவது இராஜ சிம்மனென்பர். பிற்காலத்தில் இவன் பல்லவ மல்லனை வென்றதோடு, கூடல், வஞ்சி, கோழி என்ற நகரங்களையும் சிறப்புறப் புதுப்பித்தான். மாளவ கன்னிகையை மணத்திற்கொண்டு, மழகொங்கரைக் கீழ்ப்படுத்தினான். கங்க அரசர்க்குக் கிட்டின உறவினன். மற்றொரு காலத்தில் இவன் நெடுவயல், குறுமடை, வள்ளிக்குறிச்சி, பூவலூர், கொடும்பாளூர்என்னுமிடங்களிற் பெரும் போர் புரிந்து வெற்றி மாலை சூடியிருக்கின்றான். திருப்பாண்டிக் கொடுமுடியில் ஸ்ரீ பசுபதீஸ்வரரை ஆத்துமார்த்த தெய்வமாகக் கொண்டு வழிபட்டான். மேற்படி ஆலயத்தில் அநேக திருப்பணிகளும் இவனே செய்தானென்பர். முத்தமிழிலும் பேரபிமானம் படைத்தவன் எனத் தெரியவருகின்றான். | ஜடிலன் கலிப்பகை நெடுஞ்சடையன் பராந்தகன் காலம் கி. பி. 770. இவன் பெண்ணாகடத்துக் காடவரையும், நாட்டுப் குறும்பு என்னுமிடத்து ஆய வேளையும் குறும்பரையும் வெற்றி பெற்றிருக்கின்றான். வைத்தியர் குலத்து வந்த மூவேந்த மங்கலப் பேரரையனாகிய மாறன்காரி என்பவர் இவனுடைய முக்கிய மந்திரி.
|