இம்மந்திரிக்கு மதுரதரன் என்னும் பெயருளது. இவரது நகரம் கரவந்தபுரம். ஆனைமலைச் சாசனத்தால் இவ்வரசன் காலம் கி. பி. 770 என்று தெரிகிறது. மதுரதரன் என்னும் மந்திரியே பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவராகிய மதுரகவி ஆழ்வார் எனப்படுவரென்பர்.  இராஜ சிம்மன் 2-வது
இவனைப் பற்றி விசேஷமாய் ஒன்றுந் தெரியவில்லை.  வரகுண மஹா ராஜா.
இவன் மஹா வீரன். இடைப்பட்டுச் சோர்வடைந்து போன பாண்டிய இராச்சியத்தை வெகு கம்பீரத்துடன் விளங்கச் செய்தவன். இவன் பட்டத்துக்கு வந்த சில காலத்துள் தெற்கே குமரி வடக்கே இமயமலை மேற்குங் கிழக்குங் கடல்கள் ஆகிய எல்லைக்குட்பட்ட பூமிகளை யெல்லாம் தன் வசப்படுத்திக்கொண்டவன். இவனைப் பற்றிய சிலா சாஸனங்கள் எல்லா நாட்டிலுமிருக்கின்றனவாம். பாண்டி நாட்டிலுள்ள அம்பா சமுத்திரம் ஸ்ரீ காசி பேஸ்வரர் ஆலயத்தில் இவனது சிலா சாஸனமொன்றுளது. அது கீழ்வருவது:- 1-வது சாசனம். ஸ்வஸ்தி ஸ்ரீ படாரரனுக்ரகத்தினால் முள்ளி நாட்டிளங்கோய்க்குடித் திருப்போத்துடையார் ஸ்ரீ கோயில் படாரர்க்கு முதல் கெடாமை பொலிகொண்டு நான்கு காலமுந்திருவமிது செலுத்துவதாக வரகுண மஹா ராஜர் தொண்டை நாட்டுப் பெண்ணைக்கரை அரைசூர் வீற்றிருந்து இளங்கோக்குடிச்சவையார் கையிற்குடத்த காசு இருநூற்றெண்பது இவற்றாற் காசின்வாயிருகலமாக ஆண்டு வரை சவையர்ரளக்கும் பொலி நெல் ஐந்நூற்றெண்பதின் கலம். இவைகொண்டு படாரர் பணி மக்களும் இளங்கோக்குச் சவை வாரியரும் உடனின்று வரகுண மகா ராஜர்க்கு ராஜவர்ஷம் நான்காவதுக்கு எதிர் பன்னிரண்டாயாண்டு துலா ஞாயிறு முதலாக நிகதியாக நான்கு காலமுந்திருவமீது செலுத்தும்படி ஒரு பொழுதைக்கு வேண்டுவன அரிசி செந்நற்றீட்டல் நாழி, கும்மாயத்துக்கு பயற்றுப் பருப்புறி, நிவேதிக்க பசுவின் நெய்யாழாக்கு, பசுவின்றோய் தயிருறி, கருவாழைப் பழம் நான்கு, சர்க்கரை ஒரு பலம், கறிவமிர்து காய்க்கறி ஒன்று, புளிங்கறி இரண்டு, புழுக்குக்கறி ஒன்று பொறிக்கறி ஒன்று ஏற்றிக் கறி ஐஞ்சினுக்கும் கறி பதின் பலம் கறிதுமிக்கவும் பொறிக்கவும் பசுவினறு நெய் ஆழாக்குக் கூட்டுக்குப் பசுவின் றோய் தயிருறி, காயம் இருசெவிட்டு, இலை அமிர்து வெள்ளிலை, ஈரடுக்கு அடக்காய் பத்து நூறு ஒரு செவிட்டு ஆக நிகதி நான்கு பொழுதைக்கு வேண்டுவன அரிசிசெந்நற்றீட்டல் பதிநறு நாழி . . . . . . . . . .நியதிப்படி முட்டாமல் நெடுங்காலமுஞ் செலுத்துவதாக வைத்தார் ஸ்ரீ வரகுண மகா ராஜர். இச்சாஸனம் பெரிதாதலால் பிற்பாகத்தைப் புள்ளிக் குறியிட்டு விடுத்துச் சுருக்கமாக வரைந்துளேன். இப்பொழுது இச்சிலை மெற்றாஸ் மீஸியத்திலிருக்கிறது. திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் மேல உட்பிரகாரம் மாலை கட்டு மிடத்தில் நாட்டியிருக்கும் இரண்டு சிலையிலுள்ள சாசனமும் மேற்படி வரகுண மஹா ராஜரைப் பற்றியது. அதனையும் இங்கு சிறிது வரைந்துள்ளேன். 2-வது சாசனம். . . . . .ஸ்ரீ வரகுண மாராயற்குயாண்டு. . . . . . . .னெதிர் பதின்மூன்று இவ்வாண்டு திரு[ச்செந்தூர்]ச்சுப்பிரமணிய படாரர் உபாஸையார் திருமுலத்தானத்துப் படாரர்க்கு முதல் கெடாமைப் பொலிகொண்டு செலுத்துவதாக உடையாரடியாரா இன வரகுண மாராயர் போற்றர் இருப்பைக் குடி கிழவனும் சாத்தன் பெருமானும் அளற்று நாட்டுக்கோனும் ஐயா இரத்தான் . . . . . . . . . . .கொண்டு வைத்த நிறை குறையாப் பழங்காசு ஆஇரத்து நானூறு இக்காசிற். . . . . . . . கொற்கை ஊரார் கை இன் முதற் கெடாமைப் பொலிஊட்டுக் கொண்டு செலுத்துவதாக வைத்த நிறை குறையாப் பழங்காசு தொண்ணூற்றாறு பொன்னெட்டு இக்காசால் ஒரு காசுக்கு ஆண்டு வரை பொலி நிறைமதி நாராயத்தால் இருகல நெல்லாக வந்த
|