நெல்லு நூற்றுத்தொண்ணூற்று முக்கலனேய் ஒன்பதின் குறுணி.நெல்லால் நியதிப்படி இவர்கள் கொண்டு வந்து செலுத்தக் கடவன நாழி அரிசிக்கு முன்னாழி நெல்லாகத் திருவழதினுக்கு அரிசி செந்நெற்றீட்டல்ஒரு போதைக்கு நானாழியாக நான்கு போதைக்கு அரிசி செந்நெற்றீட்டல் பதினறு நாழியாக மார்கெழித் திருவாதிரை மாசி மகமும் வைய்யாசி வியாகமும் படி இரட்டி செலுத்துவது இப்பரிசு செலுத்தாது குற்றுக்காற்படில் இத்தேவர்க்கேய் இருபத்தைந்து காசு தண்டமுங் குடுப்பது இந்நாட்டு. . . . . . . இச்சாஸனமும் மிகப் பெரிதாதலால் சுருக்கமாக எடுத்துக் காட்டப்பட்டது. இங்குக் காட்டிய சாஸனங்களால் வரகுண மகா ராசர் சிறந்த சிவ பக்தரென்று தெரிகின்றார். இவர் கோயில்களுக்குச் செய்து வந்த வழிபாடுகள், பண்டைக் காலந்தொட்டு முறை பிறழாது இப்பவும் நடந்தேறி வருகின்ற கேரள நாட்டரசர் தருமங்களை ஒத்திருக்கின்றன. திருச்செந்தூர் சாஸனத்தின் கடைசி பாகத்தில் இவ்வரசர் கீதப்பிரியராயிருந்தாரென்று ஊகிக்கப்படுகிறார். ஆனால் அப்பாக மிகவும் மழுங்கிப் போய் விட்டது. சிலர் இவ்வரகுண பாண்டியர் காலத்திருந்த சோழன் விஜயாலயன் என்றும் இவன் அவரால் தோல்வியுற்று சிற்றரசனாய்த் தஞ்சாவூரை முதன் முதல் தனக்கு இராஜ தானியாகக் கொண்டானென்றும் வேறுள்ள சிலாசாஸனங்களால் ஊகிக்கின்றனர். ஒருவாறு இவ்விஷயம் பொருந்தவுங்கூடும். இவர் கி-பி 862-ல் கிரீடந்தரித்தவர். இவர் மாதா ஓர் சோழன் மகள். இன்னும் இவ்வேந்தரைப் பற்றிய சரித்திரங்கள் பல விரிவஞ்சி விடுக்கப்பட்டன. 
ஸ்ரீ மாறஸ்ரீ வல்லப ஏகவீரபர சக்ரகோலாகலன், இவன் கேரளர் சிங்களர் பல்லவர் வில்லவர் முதலானவர்களை ஜெயித்தவன். “பல்லவ பஞ்சனன்” என்றோர் பட்டப்பெயருமிவனுக்குளது.  வரகுணவர்மன். பராந்தகன்வீரநாரா யணசடையன். இவன் கரகிரியிற் போர்புரிந்தவன், பெண்ணாகடமழித்தவன். இவன் மனைவியின் பெயர் வானவன் மாதேவி.
 இராஜ சிம்மன் முன்றாவது
மந்தர கௌரவ அபிமானமேரு இவன் விஜயாலயன் பேரன் பராந்தகன் காலத்திலுள்ள வனாகிறான். இதுவரை வேள்விக்குடிச் செப்பேட்டை ஆதாரமாய்க் கொண்டு விளக்கப்பட்டது. இனி வருவன பல இடங்களிலுமுள்ள சிலாசாஸனங்களின் சுருங்கிய ஆராய்ச்சி என்றறிக. 
வீரபாண்டியன் இவனைச் சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் என்று சாஸனங்கள் கூறும். இவன் இராஜசிம்மன் குமாரனெனக் கூறுவர். கி-பி 925-ல் தன்னுடன் போருக்கெழுந்த ஆதித்திய கரிகால சோழன் தலை கொண்டவன். இவனைப் பற்றிய சாஸனங்கள் பாண்டிய நாட்டிலும் வடநாடுகளிலும் மற்றுமுள்ள தமிழ் நாடுகளிலும் சிறிது அருமையாகவே காணப்படுகின்றன. அம்பாசமுத்திரம் ஸ்ரீ மூலநாதர் கோவிலில் ஒரு சாஸனமுளது. அது கீழ்வருவது,- 3-வது சாசனம். ஸ்வஸ்தி ஸ்ரீ சோழன்றலை கொண்ட வீரபாண்டியற்கு யாண்டு நாலு இதனெதிர் நாலு இவ்வாண்டு முள்ளி நாட்டுப் பிரமதேயம் இளங்கோய்க் குடித்திருச்சாலைத் துறை நின்றருளின எம்பெருமானுக்கு
|