பக்கம் எண் :

930
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

ஸ்ரீ கரணத்திருச் சித்திரக்கூடத்திருந்து முப்பத்திரண்டு அச்சை உம் ஐஞ்சு வாரமோதிதானம் புக்கார் தன் [நொ] சோதி நாள்மைக் காட்டுண்பதாக வெண்பு நாட்டு கூர்த்திணைக்களத்த சாத்தன் பிரவிறை கொண்டு சவையார் காட்ட,,,,,,,,,,,,,,,,,, இச்சாஸனங் குறைவாகவேயிருக்கிறது.

 இந்த வீர பாண்டியன், பராக்கிரம பாண்டியன் குமாரனென்றும், குலோத்துங்க சோழனாற் கொல்லப்பட்டானெனவும் கூறுவர்.

 அப்பால் சில காலம் சோழ மன்னவர்களால் பாண்டி நாடு காக்கப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. சிதைந்துபோன பாண்டிய ராஜ வம்சத்தில் கோச்சடையன் குலசேகரன் என்னுமோர் பாண்டியன் கி. பி. 1190-ல் பிரசித்திபெற்றான். திரண்ட சைநியத்துடன் பல நாடுகளையுந் தன் வசப்படுத்திக்கொண்டான். இவனுடைய பிரதாபமனைத்தையும் கீழ்வரும் மெய்க் கீர்த்திப் பாசுரங்களாலறிந்து கொள்க. 

4-வது சாசனம்.

ஸ்வஸ்தி ஸ்ரீ 

  பூவின் கீழ்த்தி மேவிவீற் றிருப்ப
  மேதினி மாது நீதியிற் புணர
  வயப்போர் மடந்தை ஜயப்புயத் திருப்ப
  மாக்கலை மடந்தை வாக்கினில் விளங்க
  திசையிரு நான்கும் இசைநிலா வெறிப்ப
  மறைநெறி வளர மனுநெறி திகழ
  அறநெறிச் சமையங்க ளாறுந் தழைப்ப
  கான வேங்கையை வில்லுடன் துரந்து
+ மீனங் கனகா சலத்துவீற் றிருப்ப
  எண்கிரி சூழ்ந்த எழுகட லெழுபொழில்
  வெண்குடை நிழற்றிச் செங்கோல் நடப்ப
  கொடுங்கலி நடுங்கி நெடும்பிலத் தொளிப்ப
  வில்லவர் செம்பியர் விராடர் கனாடவர்
  பல்லவர் திறையுடன் முறைமுறை பணிய
  இருநேமி யளவும் ஒருநேமி யோங்க
* இன்னமு தாகிய இயலிசை நாடகம்
* மன்னி வளர மணிமுடி சூடி
  விளங்கிய வரசிம்மாசனத்து

 வீற்றிருந்தருளிய ஸ்ரீ கோச்சடைய பன்மரான திரிபுவன சக்ரவர்த்திகள் ஸ்ரீ குலசேகர தேவர்க்கு யாண்டு மூன்றாவது நாள் இரண்டாயிரத்து ஏழு நுற்று ஐம்பத்திரண்டு மதுரோதயவள நாட்டு மாடக்குளக்கீழ் மதுரைக் கோயில் பள்ளியறைக் கூடத்துப் பள்ளிப்பீடம் காலியங்கராயனில் எழுந்தருளியிருந்து கீழ் வேம்புநாட்டுத் திருநெல்வேலி,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, 

இச்சாஸனம் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் சபைப் பிரகாரம் தென்புறத்திலுள்ளது.

 5-வது சாசனம். 

ஸ்வஸ்தி ஸ்ரீ

   பூதல வனிதை மேதக விளங்க
   சுந்தர மார்பில் இந்திரை யிருப்ப
   புயல்வரை தழுவிய வயமகள் களிப்ப
 * மயலறு சிறப்பின் மாமுனி தேர்ந்த
 * இயலிசை நாடகம் எழில்பெற வளர