+ வாளார்ந்த பொற்கிரிமேல் வரிக்கயல்கள் விளையாட இருங்கடல் வலயத் தினிதறம் பெருக கருங்குலி கடிந்து செங்கோல் நடப்ப ஒருகுடை நீழலீ லிருநிலங் குளிர * மூவகைத் தமிழு முறைமையின் விளங்க நால்வகை வேதமும் நவின்றுடன் வளர ஐவகை வேள்வியு மெய்வகை விளங்க அறுவகைச் சமயமும் அழகுடன் திகழ * ஏழுவகைப் பாடலு மிசையுடன் பரவ எண்டிசை யளவுஞ் சக்கரஞ் செல்ல கொங்கணர் கலிங்கர் கோசலர் மாளவர் சிங்களர் தெலுங்கர் சீனர் குச்சார் வில்லவர் மாகதர் விக்கலர் செம்பியர் பல்லவர் முதலாப் பார்த்திவ ரெல்லாம் உறைவிட மருளென வொருவர்முன் னொருவர் முறைமுறை கீழ்வந் திறைஞ்ச விளங்கொளி மணிமுடி யிந்திரன் பூட்டிய பொலன்கதிர் ஆர மார்பினிற் பொலியப் பனிமலர் திசைமுகன் படைத்த,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, மனுநெறி தழைய மணிமுடி சூடி பொன்னிசூழ் நாட்டுப் புலியாணை போயகல * கன்னிசூழ் நாட்டிற் கயலாணை கைவளர வெஞ்சின விவுளியும் வேழமும் பரப்பித் தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்திக் காவியும் நீலமும் நின்றுகவி னிழப்ப ஆவியு மாறு அணிநீர் நலனழித்துக் கூடமா டங்களுங் கோபுரமு மாடரங்கும் மாடமா ளிகையு மண்டபமும் பலவிடித்துத் தொழுது வந்தடையா நிருபர்தந் தோகையர் அழுத கண்ணீ ராறு பரப்பிக் கழுதைகொண் டுழுதுக் கவடிவிச்சுச் செம்பியனைச் சினம்பிரியப் பொருது சுரம்புக வோட்டி பைம்பொன்மணி முடிபறித்துப் பாணனுக்குக் கொடுத்தருளி பாடருஞ் சிறப்பிற் பருதிவான் றோயும் ஆடகப் புரிசை யாயிரத் தளியில் சோழ வளவன் அபிஷேக மண்டபத்து வீராபி ஷேகஞ் செய்துபுகழ் விரித்து நாளும் பரராசர் நடுத்தலை விழுங்கி மீளுந் தறுகண் யானைமேற் கொண்டு நீராழி வையம் பொதுவற வொழித்துக் கூராழியுஞ் செய்ய தோளுமே கொண்டுபோய் ஐயப் படாத அருமறைதே ரந்தணர்வாழ் தெய்வப் புலியூர்த் திருவெல்லை யிற்புக்குப் பொன்னம் பலம்பொலிய நின்றாடுவார் பூவையுடன்
|