மன்னுந் திருமேனி கண்டு மனங்களித்துக் கோலமலர் மேலயனுங் குளிர்துழாய் மாலும் அறியா மலர்சேவடி வணங்கிச் சிறையன்னந்த துயிலொழிய வண்டழெம்பும் பூங்கமல வாவிசூழ் பொன்னம ராபதியி லனைத்துலகந் தாங்குயர் மேருவைக் கொணர்ந்து வைத்தன்ன சோதிமண்டபத்திலிருந்து சோலை மலிபுனற் சோணாடு தானிழந்த தார்மாலை முடியுந்த தரவருக வென்றழைப்ப மான நிலைகுலைய வாளகிரிக் கப்புறத்துப் போன வளவ னுரிமை யொடும்புகுந்து பெற்ற புதல்வனைநின் பேறென்று முன்காட்டி வெற்றி யரியணைக்கீழ் வீழ்ந்து தொழுதிரப்பக் கானோடி முன்னிகழ்ந்த வெம்மையெல்லாங் கையகல தானோதகம் பண்ணித் தண்டார் முடியுடனே ,,,,,,,,,,,,,,புகலிடங்கண்டி,,,,,,,,,,,, இது பிடிபாடாகவெனப் பொங்குதிரை ஞாலத்துட் பூபாலர் தொழவிளங்குஞ் செங்கையல் கொண்டுன்றிருமுகமும் பண்டிழந்த சோளபதி யென்னு நாமமுந் தொன்னகரும் மீள வழங்கி விடைகொடுத்து விட்டருளி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,ஜெயத்தம்பம் நாட்டிய ஸ்ரீ கோ மாறவன்மரான திருபுவன சக்ரவர்த்திகள் ஸ்ரீ சோணாடு கொண்டு முடிகொண்ட சோழபுரத்தில் வீராபிஷேகம் பண்ணி அருளிய ஸ்ரீ சுந்தர பாண்டியதேவருக்கு யாண்டு பத்தாவது நாள் 5ள84,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, இதுவும் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலிலுள்ளது. அப்பால் கி பி 1234-ல் இரண்டாவது மாறவர்மன் சுந்தரபாண்டியனும் கி பி 1251-ல் எம்மண்டலமுங் கொண்டருளிய சுந்தரபாண்டியனும் கி பி 1268-ல் எம்மண்டலமுங்கொண்டருளிய மாறன்குலசேகர பாண்டியனும் வெகுகம்பீரத்துடன் அரசியற்றி வந்திருக்கின்றனர். இவர்களுக்குரிய மெய்க்கீர்த்திகளை யெல்லாமிங்கெடுத்துக்காட்டல் சாத்தியமல்லவென விடுவிக்கப்பட்டன. பிறகு கி பி 13-வது நூற்றாண்டில் இத்தமிழ்நாடுகளோடு வடநாடுகளையும் தன் வசப்படுத்திக் கொண்டாண்டவன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன். இவனுடைய தண்டத்தலைவனே கப்பற்கோவைக்கு நாயகனாவான். இவ்வேந்தன் கருநாட்டரசனையும் வென்றுளான். கப்பற்கோவையாலுமிதனை அறியலாகும். இந்த ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் பரிசுத்தமான சிவபக்தன் எனவும் பண்ணோடு தேவாரமோதத் தெரிந்தவனெனவும் தெரிகின்றான். பாண்டியநாட்டிலுள்ள கோயில்களில் திருஞானமோதல்-தேவார மோதுதலை ஏற்படுத்தியிருக்கின்றான். இவ்விஷயத்தைக் கீழ்வரும் சாஸனத்தாலறியலாகும். 7-வது சாஸனம். திரிபுவனசக்ர,,,,,,,,,,,,,,,,,,,,,, கீழவேம்புநாட்டு உடையார் திருநெல்வேலியுடைய நாயனார் கோயில் பதிபாதமுதல் பட்டடைப் பஞ்சாச்சாரிய தெய்வக் கன்மிகளுக்கு இவ்வூருடைய திருமுன்பு திருஞான மோதுமாதவர் விக்கிரமசோழதேவர்கண்ட தபசிகளில் விஷகண்டதேவர் சந்தானத்து எல்லையில்லாத் தேவர் சிஷ்யரில் தவப்பெருமானுக்கும், பகவத்சந்தானத்து மகாதேவ சிஷ்யரில் அனபாயனுக்கும், திருவாரூர் வடக்குமடத்தில் சிவபாத இருதய சிஷ்யரில் திருநம்பப் பெருமானுக்கும் பிக்ஷாமட சந்தானத்து இராவளர் பசுபதீதேவ சிஷ்யரில் நின்றியங்கி யாடுவானுக்கும் திருவாரூர் வடக்குமடத்து அஸ்தரதேவ சிஷ்யரில் சந்தான
|